மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான மனுக்களை வழங்கச் சிறப்பு முகாம் நடைபெறுகிறது என்று வாட்ஸப்பில் பரவும் செய்தி வதந்தி என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசு குடும்ப பெண்களின் உழைப்பிற்கு அங்கிகாரம் கொடுக்கவும் மற்றும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி ‘கலைஞர் மகளிர் உரிமை தொகை’ திட்டத்தை அறிமுகம் செய்தது.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் இத்திட்டத்தின் கீழ், 1 கோடிக்கும் அதிகமான பெண்கள் பயன் பெற்றுவருகிறார்கள். இத்திட்டத்தில் இணைந்து பயன்பெற விரும்பும் குடும்பங்களுக்கு தேவையான தகுதிகள் –
- ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்குக் கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள்
- ஐந்து ஏக்கருக்குக் குறைவாக நன்செய் நிலம் அல்லது பத்து ஏக்கருக்குக் குறைவாகப் புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள்.
- ஆண்டிற்கு வீட்டு உபயோகத்திற்கு 3600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள்.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக இத்திட்டத்தில் இணைய அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மக்களிடமிருந்து மனுக்களைப் பெற ஆகஸ்ட் 17, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடக்கவிருப்பதாக வாட்ஸப்பில் புகைப்படம் ஒன்று பரவி வருகிறது.
இதை உண்மையல்ல, வெறும் வதந்தி தவறான தகவலைப் பரப்பவேண்டாம் என்று தமிழ்நாடு அரசின் ஃபேக்ட் செக் யுனிட் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
என்ன அழகு எத்தனை அழகு… மாடல்களுக்கு சவால் விட்ட சர்ச்சை குத்துச்சண்டை வீராங்கனை!
யு/ஏ சான்றிதழ் கிடைச்சாச்சு… ரிலீஸுக்கு ரெடியாகும் ‘வணங்கான்’!
திருமா பிறந்தநாள்.. ராகுல், ஸ்டாலின், அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!
Comments are closed.