மத்திய அரசில் அதிகாரியாக ஆசையா? யுபிஎஸ்சி அழைக்கிறது… மாதம் ரூ.1 லட்சம் சம்பளம்! மிஸ் பண்ணிடாதீங்க!

Published On:

| By Santhosh Raj Saravanan

UPSC direct recruitment for central government posts

“ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு மட்டுமல்ல; மத்திய அரசின் முக்கியத் துறைகளில் நேரடி நியமனம் மூலமாகவும் அதிகாரியாக முடியும்” என்பதை நிரூபிக்கும் வகையில், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் காப்புரிமை, வடிவமைப்பு மற்றும் வர்த்தக முத்திரைகள் அலுவலகத்தில் (CGPDTM) காலியாக உள்ள உயர் அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

டிகிரி முடித்துவிட்டு, “நல்ல சம்பளத்தில், கௌரவமான மத்திய அரசு வேலை வேண்டும்” என்று தேடிக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு இது உண்மையிலேயே ஒரு ‘கோல்டன் சான்ஸ்’.

வேலை என்ன? காலியிடங்கள் எவ்வளவு?

ADVERTISEMENT

யுபிஎஸ்சி வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பில், மொத்தம் 102 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

வர்த்தக முத்திரைகள் மற்றும் புவிசார் குறியீடுகள் ஆய்வாளர் (Examiner of Trade Marks & Geographical Indications):

ADVERTISEMENT

இதற்கு மொத்தம் 100 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இது குரூப் ‘ஏ’ அந்தஸ்திலான கெசட்டட் (Gazetted) பதவியாகும்.

துணை இயக்குநர் (Deputy Director – Examination Reforms):

இதில் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வித் தகுதி என்ன?

ஆய்வாளர் பணிக்கு: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சட்டம் (Law Degree) படித்திருக்க வேண்டும் அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன், வர்த்தக முத்திரை மற்றும் புவிசார் குறியீடுகள் சட்டத்தில் டிப்ளமோ முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். (துல்லியமான கல்வித் தகுதியை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் சரிபார்க்கவும்).

துணை இயக்குநர் பணிக்கு: முதுகலைப்பட்டம் மற்றும் முன் அனுபவம் தேவைப்படும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 21 வயது பூர்த்தியடைந்தவராகவும், 35 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். (எஸ்.சி/எஸ்.டி, ஒபிசி பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு).

சம்பளம் எவ்வளவு?

மத்திய அரசுப் பணி என்பதால் சம்பளத்திற்குப் பஞ்சமிருக்காது. ஆய்வாளர் பணிக்கு ஊதிய நிலை-10 (Level-10) படி சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அடிப்படைச் சம்பளம் ரூ.56,100 ஆக இருந்தாலும், டிஏ, எச்ஆர்ஏ உள்ளிட்ட இதர படிகள் சேர்த்து, மாதம் கையில் சுமார் ரூ.1,00,000 முதல் ரூ.1,25,000 வரை சம்பளம் கிடைக்க வாய்ப்புள்ளது.

எப்போது விண்ணப்பிக்கலாம்?

இந்த வேலைவாய்ப்பிற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு வரும் டிசம்பர் 13, 2025 அன்று தொடங்குகிறது.

விருப்பமுள்ளவர்கள் www.upsconline.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்: 13.12.2025

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 01.01.2026

வருகிற டிசம்பர் 13ஆம் தேதி விரிவான அறிக்கை யுபிஎஸ்சி இணையதளத்தில் வெளியாகும். அதில் பாடத்திட்டம், தேர்வு மையங்கள் குறித்த விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share