இன்னிக்கு நண்பர் கூட டீ குடிக்க போயிருந்தேன்… அப்ப, ‘இந்த ஃபேஸ்புக்ல யார் பொண்ணு, யார் பையனே தெரிய மாட்டிங்குது… ஏகப்பட்ட ஃபேக் ஐடிகள் இருக்குனு புலம்பிகிட்டே இருந்தாரு…
இத கேட்ட நம்ம டீ மாஸ்டரு… அப்டேட் ஆகுங்க தம்பி…
ஃபேக் வோட்டர் ஐடி உருவாக்கி… நம்ம ஓட்டையே திருடிட்டு இருக்காங்க… நீங்க ஃபேஸ்புக் ஃபேக் ஐடி பத்தி பேசிட்டு இருக்கீங்க… தேர்தல் வேற வருது உஷாரா இருக்கனும்னுனு’ சொல்லி சூடா ஒரு டீய கொடுத்தாரு
இத கேட்ட நம்ம நண்பர்… தேர்தல் ஆணையம் என்னதான் செய்யுனு புலம்பிகிட்டே கிளம்பிட்டாரு
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

balebalu
கூட்டணி கிடையாது ன்னு சொல்லிட்டாங்க
நாம வேற கொடி அசையுது , பிள்ளையார் சுழி போட்டாச்சு ன்னு எல்லாம் வசனம் பேசிட்டோமே
இப்ப என்ன சொல்லி சமாளிக்கிறது

Mannar & company
மனசை பாரமா வச்சிக்கிட்டு வாக்கிங் போகாதீங்க அப்புறம் நடக்க முடியாது!
walking

Writer SJB
முடிஞ்சா தலைவரை கைது செய்ங்க பார்க்கலாம்
நாங்க கைது பண்ணிடுவோம்னு பயந்து தானே வழக்கை சிபிஐக்கு மாத்துனீங்க அப்புறம் எதுக்கு இந்த வெட்டி சவால்?

ச ப் பா ணி
நமக்கு நாமே ஆறுதல் சொல்லிக் கொள்வது போலத்தான்..
நமக்குநாமே டீ போட்டுக் குடிப்பதும்

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
பல மனிதர்களுக்கு நாம் செருப்பு போலத்தான்.. ”கழட்டிவிடும்” நாள் வரை பயன்படுத்த படுவோம்.

Mannar & company
கடவுள் எல்லோர் வீட்டிலும் இருக்க முடியாது என்பதற்காகதான் அம்மாவை படைத்தார்.
அப்ப மனைவியை ஏன் படைத்தார்..?!
கடவுளை மறந்துவிடக் கூடாதுன்னுதான்!
mohanram.ko
செங்கோட்டியனை கட்சியிலிருந்து நீக்கியதற்கு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்-செய்தி
மறுபடி கட்சியில் சேர்த்துக் கிட்டாலும் பட்டாசு வெடிப்பாங்கப்பா

கோழியின் கிறுக்கல்!!
யாருப்பா நீ,
Sugar doctor opக்கு வெளிய உட்கார்ந்துட்டு,
‘கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர் பாகு செய்வது எப்படி’னு Reels பார்த்துட்டு இருக்க!?

Palani Bharathi
கதவுக்குப் பின்னால்
ஒளிந்துகொண்டது குழந்தை
அதன் கையிலிருந்து
நழுவிய பந்து
மெதுவாக உருண்டு
கதவுக்கு வெளியே
எட்டிப் பார்த்தது
காற்று
அதைச் சத்தமில்லாமல்
அறைக்குள்
அழைத்து வந்துவிட்டது
காற்று
கதவு
குழந்தை
பந்து
கடைசியில்
எல்லாவற்றையும்
கண்டுபிடித்துவிட்டாள்
அம்மா

மருத்துவர். அனுரத்னா
மருத்துவமனையில் இன்று ஒரு 20 வயது பெண்ணை பார்த்தேன்.
குழந்தை பிறந்து 6 மாதம் ஆச்சு என்றார்.
இந்த ஆறு மாதமா தொடர்ந்து உதிரப்போக்கு இருக்கு என்றார்.
ஆறு மாசமா இருக்கா?
என்னம்மா பண்ணிக்கிட்டு இருந்த ஆறு மாசமா டாக்டரை பார்க்காம, உன் வீட்டில் உள்ளோர் என்ன பண்றாங்க உன்னை டாக்டர்ட கூட அழைத்து வராமல் என்றேன் கோபமா.
பத்து மாசம் தீட்டு வராமல் தானே இருந்துச்சு, அதெல்லாம் இப்ப வெளில வருது, இப்படி வரது நல்லதுனு எங்க அம்மா சொன்னாங்க மேடம் என்றார் அந்தப் பெண்.
சிகிச்சை அளித்தேன். கூடவே தீட்டு என்கிற வார்த்தையை உபயோகிக்காதே, உன் உடல் தீட்டு என நீயே எப்படி சொல்ற, இதை சொல்ல உனக்கு பெருமையா வேறு இருக்கா என திட்டி விட்டேன் கோபமா.
பிறகு எடுத்துச் சொன்னேன்.
ப்ரோஜெஸ்டிரோன் மற்றும்
பாலூட்டுதலுக்கு தேவையான ஹோர்மோன் ப்ரோலாக்டின் போன்றவை கருவுற்ற காலத்தில் அதிகம் இருக்கும். அது மாத சுழற்சி உதிரப்போக்கை நிறுத்தும்.இது ஹார்மோன்களின் செயல்பாடு. இது கெட்ட ரத்தம் சேர்வது என பொருள் இல்லை.
குழந்தை பிறந்தாலும் ஒரு 42 நாட்கள் உத்திரப்போக்கு இருக்கலாம்.அதுவும் குறைவான அளவில் இருக்கும். அதுக்கு மேல் உத்திரப்போக்கு இருந்தால் மருத்துவரிடம் வரவேண்டும் என்றேன்.
இதையே இன்னும் எத்தனை காலத்துக்கு தான் சொல்வது????
பள்ளி கல்வியிலேயே மாத சுழற்சி உதிரப்போக்கு குறித்த விழிப்புணர்வை நாம் ஏற்படுத்த வேண்டும். இதை optional ஆக வைக்காமல், கட்டாயம் என கொண்டு வர வேண்டும்.

லாக் ஆஃப்
