ADVERTISEMENT

FEFSI அமைப்புக்கு எதிராக ஒரு FANTA அமைப்பு!

Published On:

| By Minnambalam Desk

சும்மா வாயில் வடை சுடுவதற்காக ஒரு முறை பிரதமர் மோடி இந்தியாவின் மூத்த மொழி தமிழ்தான் என்று பேச, அப்போது பாரதிய ஜனதா ஆதரவாளராக இருந்த எஸ் வி சேகர் ”அது எப்படி அவர் அப்படி சொல்லலாம்? பிரதமரே உண்மைக் கண் திறப்பினும் அதை ஏற்க மாட்டோம். சமஸ்கிருதம்தான் மூத்த மொழி ” என்றார்.

திடீரென்று கொஞ்ச நாட்களாக ”திமுகதான் சிறந்த ஆட்சி தருகிறது. திமுகவைத்தான் எல்லோரும் ஆதரிக்க வேண்டும்” என்றெல்லாம் பேசியபோது ஒரே ஆச்சர்யம். காரணம் இப்போ புரியுது.

ADVERTISEMENT

சினிமாவில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சம்பளம் சரியாகக் கிடைப்பது, பணிப் பாதுகாப்பு, ஆபத்துக் கால உதவி போன்ற விசயங்களுக்காக உருவாக்கப்பட்டது FEFSI என்கிற தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம்.

ஆரம்பத்தில் எல்லாம நன்றாகப் போனது. ஆனால் ஒரு நிலையில் FEFSI அமைப்பைச் சேர்ந்த சிலர், ‘ஒரு ஷூட்டிங் என்றால் நாங்கள் சொல்லும் எண்ணிக்கையில்தான் ஆட்களை வேலைக்கு எடுக்க வேண்டும். ஒரு கால்ஷீட் டைமுக்கு அரைமணி நேரம் மட்டுமே சலுகை உண்டு. அதற்கு மேல் ஒரு மணி நேரம் போனாலும் அடுத்த எட்டு மணி நேரத்துக்கான பேட்டா தரவேண்டும், எங்கள் ஆட்கள் ஷூட்டிங்குக்காக வெளியூருக்கு பயணம் செய்தால் பயணச் செலவு மட்டுமின்றி அந்த கால அவகாசத்துக்கும் பேட்டா தர வேண்டும் என்று மேலோங்கினார்கள். (தூங்கறதுக்கு ஸ்லீப்பிங் பேட்டா கேட்கறாங்க சார் என்று தயாரிப்பாளர்கள் பொங்கியதும் உண்டு). சின்னச் சின்ன விசயங்களுக்காக படப்பிடிப்பை நிறுத்தி நஷ்டம் ஏற்படுத்தினார்கள் என்பது தயாரிப்பாளர்கள் தரப்பு.

ADVERTISEMENT

படத் தயாரிப்பு செலவுகள் அதிகரித்து வரும் நிலையில் நாங்கள் எங்களுக்கு வசதியான தொழிலாளர்களை வைத்து எங்களுக்குத் தோதாக படப்பிடிப்பை நடத்திக் கொள்கிறோம் என்ற முடிவுக்கு அவர்கள் வந்தனர்.

தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தைப் போல இன்னொரு தொழிலாளர் அமைப்பை தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் என்ற பெயரில் உருவாக்கி இருக்கிறார்கள். இதில் FEFSI போல குரல் எழுப்ப முடியாது (அல்லது இப்போதைக்கு முடியாது) தயாரிப்பாளர்களின் கைதான் ஓங்கும்.

ADVERTISEMENT

இந்த அமைப்புக்கு தமிழக அரசு அங்கீகாரம் கொடுத்து விட்ட நிலையில் இந்த அமைப்பின் பின்னணியில்,, முன்னணியில் இருக்கிறார் எஸ் வி சேகர்.

சூப்பர் சார்…

அப்படியே தனது மார்க்கெட் வேல்யூவுக்கும் அப்பாற்பட்டு கோடி கோடியாக சம்பளம் வாங்கி தயாரிப்பாளர்களைக் காலி செய்கிற நடிகர்கள் இருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கும் மாற்றாக, நன்றாக நடிக்கத் தெரிந்த நடிகர்களை மட்டும் கொண்ட ஒரு தமிழ்நாடு நடிகர் சங்கத்தையும் உருவாக்குங்களேன். ஹி ஹி ஹி!

  • ராஜ திருமகன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share