Mannar & company™🕗
டீச்சர்: காலாண்டு லீவு முடிஞ்சு வந்துருக்கீங்க முதல் நாள் அதுவுமா என்கிட்ட என்ன கேட்க விரும்புறீங்க?
ஸ்டூடண்ட் : அரையாண்டு லீவு எப்ப டீச்சர் விடுவீங்க!?

பனை – எதிரொலி
மாமியாருக்கு நல்ல மருமகனாக இருக்கும் ஆண்கள்,
மாமனாருக்கு நல்ல மருமகனாக இருப்பதில்லை !!
லிட்டில் பிரின்சஸ்களுக்கு நல்ல அப்பாவாக இருக்கும் ஆண்கள், மருமகனுக்கு நல்ல மாமனாராய் இருப்பதில்லை !!
மகளுக்கு நல்ல தந்தையாக இருக்கும் ஆண்கள், தன் மனைவிக்கு நல்ல கணவராய் இருப்பதில்லை !!
மகனுக்கு நல்ல தாயாக இருக்கும் பெண்கள், கணவனுக்கு நல்ல மனைவியாக இருப்பதில்லை !!

mohanram.ko
கோயில்ல செருப்பு தொலைந்தா நல்லதாம்…
யாருக்கு
செருப்பு கடைக்காரருக்கு…

▶படிக்காதவன்™✍
கரண்ட் ஆஃப் ஆகிடுச்சுனு வெளியே வாசலில் உட்கார்ந்துருந்தேன் ரெண்டு விரல் அளவு பூச்சி வந்துடுச்சு
எங்கம்மா அந்த குச்சி எடுத்து அடினு சொல்ல நானும் குச்சி எடுத்தேன்
புரட்டாசி மாசம்னு தயங்கிட்டே நின்னுட்டு இருந்தேன்
நீ சாமி கும்பிட்டு அடிக்கிறதுக்குள்ள அது பாரின் போயிடும்’ங்கிறாங்க…

Mannar & company™🕗
மாசம் முழுவதும் சம்பாதிச்சதை செலவழிக்க வர்றதுதான் ஞாயிற்றுக்கிழமைகள்,
வருசம் முழுவதும் சம்பாதிச்சதை செலவழிக்க வர்றதுதான் தீபாவளி போன்ற பண்டிகைகள்!
தீபாவளி_பரிதாபங்கள்

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
பொதுநல வழக்குகளில், தவெக தலையிடாது – தவெக வழக்கறிஞர் அறிவழகன்
என்ன காரணம்னு தெரிஞ்சுக்கலாமா..?
வழக்கு விசாரணை சனிக்கிழமை நடந்தா மட்டும் தான் கோர்ட்டுக்கு வருவோம்..

Mannar & company™🕗
தொப்பையை குறைக்கணும்னு நினைப்பவன்
கொஞ்சகாலம் முயற்சி பண்ணுவான்,
மறைக்கணும்னு நினைப்பவன்தான்
வாழ்க்கை முழுவதும் கஷ்டப்படுவான்!
வாக்கிங்_தத்துவம்

சரவணன். 𝓜
ஒரே நாள்ல கீழே இருந்து மேலே போயிடுச்சு…
~ தங்கமா வெள்ளியா மாப்ள..
சன் நெட்வொர்க் சேனல்களோட லோகோ மாமா..

லாக் ஆஃப்