Mannar & company™🕗
விடுப்பா விடுப்பா..! தீபாவளி முடிஞ்சு பத்து நாளைக்கு சாப்பாட்டுக்கு முறுக்கு, அதிரசம்லாம் சைடிஷ்ஷா வைக்கிறது சகஜம் தானப்பா.!!

டிங் டாங்
மேலே செல்லும் எஸ்களேட்டரில் இறங்கிக் கொண்டிருக்கிறேன்
கீழே இறங்கும் எஸ்களேட்டரில் ஏறிக் கொண்டிருக்கிறேன்
பைத்தியம் பிடித்து விட்டதா என்று கேட்டார்கள் ?
திருமணம் ஆகிவிட்டதென்று சொன்னேன்

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
50 கிராம் பக்கோடா சாப்ட்டா, 25 கிராம் பக்கோடா தூள் பல் சந்துல தான் போயி மாட்டிக்குது..
எனவே, பல் இருக்கவன் பக்கோடா சாப்பிடலாம், ஆனா பல் ரொம்ப வருசம் இருக்கனும்னு நினைக்கறவன் பக்கோடா சாப்பிட கூடாது.

Mannar & company™🕗
சிலருக்கு தூங்கிட்டுட்டு நல்லா சாப்பிடணும்,
சிலருக்கு நல்லா சாப்பிட்டுட்டு தூங்கணும்..
ஞாயிற்றுக்கிழமை கனவுகள்!

Greesedabba2
ஒரு உதவின்னு மெசேஜ் அனுப்பினா செய்ய மாட்டேன்னு மூஞ்சில அடிச்ச மாதிரி ரிப்ளை பண்றான் பாரு அவனை கூட மன்னிச்சுரலாம். ஆனா மெசேஜை பிரிவியூ மோட்ல பார்த்துட்டு பாக்காத மாதிரி நடிக்கறான் பாரு அவனை மட்டும் நம்பாதே, பூட்ட கேஸா போயிருவ..

Anvar_officia
காதல் பண்றவனிடம் கேட்டுப்பார் எதை “செய்ய வேண்டும்” என்று சொல்லிக்கொடுப்பான்,
கல்யாணம் பண்ணியவனிடம் கேட்டுப்பார் எதை
“செய்யக் கூடாது” என்று சொல்லிக் கொடுப்பான்!

Sasikumar J
முன்னெல்லாம் 10 பேரு வீட்டுல இருந்து பலகாரம் தருவாங்க அதே பலகாரத்தை அடுத்தவங்களுக்கு மாத்தி கொடுத்தாலும் தெரியாது…!
ஆனா இப்ப அப்படி இல்ல..!!

▶படிக்காதவன்™✍
இல்லாதபோது தேடுறதும்
இருக்கும்போது ஏளனம் பண்றதும்
சில மனிதர்களுக்கு சகஜமானதுதான்…

✒️Writer SJB✒️
இவ்வளவு ஸ்வீட்டா எனக்கு மெசேஜ் பண்ணாதீங்க க்ரஷ்,,
ஏன் என்ன ஆச்சு?
மொபைல் போன் ல எறும்பா மொய்க்குது..!
லாஃப் ஆஃப்
