ADVERTISEMENT

‘அட.. அட!’ கவர்ச்சியும் ‘அடடே..” அங்கீகாரமும்!

Published On:

| By Minnambalam Desk

Fire Movie Receives Prestigious Official Selection

சின்னத்திரை புகழ் ரக்ஷிதா மகாலட்சுமி, பாலாஜி முருகதாஸ்,மற்றும் சாந்தினி தமிழரசன், சாக்ஷி அகர்வால், சிங்கம் புலி, நடிப்பில் தயாரிப்பாளர் ஜேஎஸ்கே சதீஷ்குமார் இயக்கி தயாரித்து முக்கிய வேடத்தில் நடித்து, இந்த வருடம் காதலர் தினத்தன்று வெளியான படம் ’FIRE’.

அதுவரை தொலைக்காட்சித் தொடர்களில் குடும்பப்பாங்காக முழுப் பவுர்ணமி முகத்தோடு நடித்து வந்த ரக்ஷிதா மகாலட்சுமி அந்தப் படத்தில் பகீர் கவர்ச்சியாக நடித்தார் என்பதுதான் அந்தப் படத்தின் USB.

ADVERTISEMENT

ரக்ஷிதா மகாலட்சுமி அப்படி நடித்து இருக்கிறாரா என்று ரசிகர்கள் தியேட்டருக்கு வர, இண்டஸ்ட்ரியே ஆச்சர்யப்படும் வகையில் வசூல் தந்தது FIRE. காதலர் தின வாரம் காமத்தில் மிதந்தது .

ஆனால் அதை மட்டுமே நம்பாமல் படத்தின் இரண்டாம் பகுதியில் சில நல்ல திருப்பங்கள் வைத்து இருந்தார் JSK சதீஷ் குமார் .

ADVERTISEMENT

எட்டுமாத இடைவெளியில் இப்போது இன்னொரு ஆச்சர்யம் .

இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் திரைப்படங்களை கொண்டு சென்று, இயக்குனர்கள், ரசிகர்கள், மற்றும் விமர்சகர்களை கலந்துரையாட வைக்கும் ஜாக்ரன் பிரகாஷன் குழுமம் என்ற அமைப்பு நடத்தும் ‘Travelling Film Festival’ என்ற உலகப் பட விழாவில், மேற்படி FIRE “Special Category” பிரிவில் அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாம்.

ADVERTISEMENT

வியாபாரத்திலும் வென்று விருது நோக்கியும் பயணிக்கிற JSK விவரமானவர்தான்.

ராஜ திருமகன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share