mohanram.ko
கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்பதின் லேட்டஸ்ட் வெர்ஷன் தான் ….ஸ்கூலுக்கு லீவும் விடனும் ,மழையும் பெய்யக்கூடாது…

Poongulali
மழை பெய்யும்
என்று சொன்னீர்கள்
குடையோடு சுற்றிக்கொண்டிருந்தோம் .
மழை பெய்யாது என்று சொன்ன நாளில் ,
கொட்டிய மழையில் நனைந்தோம்.
எதேனும் ஒருநாளில்
நீங்கள் பெய்யும் எனும்போது
பெய்கிறது மழை.

Mannar & company™🕗
இன்னிக்கு யாரை நீங்க கல் நெஞ்சக்காரன்னு சொல்றீங்களோ.. நினைக்கிறீங்களோ..
அவங்கதான் ஒருகாலத்தில் இளகிய மனசோட இருந்தவங்க!

Sasikumar J
~ நல்லவங்க இருக்குற ஊருல தான் மழை பெய்யும்…!
~ டேய் இது மழை காலம் தான்டா எல்லா ஊர்லயும் மழை பெஞ்சு கிட்டு தான் இருக்கு…!

Mannar & company™🕗
பள்ளிகளுக்கு லீவு விடுறதை தவிர மழையை நிறுத்த வேற வழி தெரியலை ஆத்தா..

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
நாகசைதன்யாவும் ஜகபதிபாபுவம் கோயமுத்தூர் வளர்மதி மெஸ்ஸை ஆஹா ஓஹோன்னு பாராட்டற வீடியோ சோஷியல் மீடியால வைரல் ஆகுது..
Side effect 1: இதான் சாக்குன்னு கன்னா பின்னான்னு விலை ஏத்த போறான்
Side effect 2: ஆந்திராகாரனுக திருவண்ணாமலையை டேக்ஓவர் பண்ண மாதிரி கோயமுத்தூரையும் ஆக்ரமிக்க போறானுக

டிங் டாங்
கொடுக்கிற சம்பளத்தை விட அதிகமாக வேலை வாங்கிவிட நினைக்கும் முதலாளியின் கடையில் , அன்லிமிடெட் சாப்பாட்டுக்கு கொடுக்கிற காசை விட அதிகமாக சாப்பிட வேண்டும் என்று கஸ்டமர் நினைக்கிறார்.

Sasikumar J
~ தீபாவளிக்கு 3 இல்ல 4 புது டிரஸ் எடுக்கலாம் சொன்னா எங்க கேட்கிறீங்க…!
~ தீபாவளிக்கு அப்பறம் எப்படியும் மழை வரும் துணி துவைத்து காயவைக்க முடியலானாலும் புது டிரஸ் போட்டு சமாளிச்சுகளாம்…!!

Mannar & company™🕗
மழை காலத்தில் ஸ்கூல் லீவு விட்டால் பெற்றோர்கள் இரண்டு விஷயங்களை சமாளிக்க வேண்டும்.
ஒண்ணு மழை
இன்னொன்று மழலை!

✒️Writer SJB✒️
தீபாவளி முடிஞ்சு ரெண்டு நாள் ஆகியும் வெடிச்சத்தம் நிக்கல பாருங்க தம்பி,
அது வெடி இல்ல இடி மழைல பார்த்து வண்டி ஓட்டு..!

balebalu
‘ தாம்பரம் கார்ப்பரேஷன் ‘ க்கு ன்னு ஒரு சிறப்பம்சம் உண்டு
அட அவ்வளவு நல்லா நிர்வாகம் செய்யுறாங்களா
அதான் இல்ல
நடவடிக்கை எடுக்கல்ல ன்னு எவ்வளவு கழுவி ஊத்தினாலும் தங்களுக்கு சம்பந்தம் இல்லை என்பது போல் கண்டுக்காம இருப்பாங்க
லாக் ஆஃப்
