இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்க டீ மாஸ்டர் கையில வழக்கத்துக்கு மாற கொழுக்கட்டைய வச்சிக்கிட்டு நின்னுட்டு இருந்தாரு…
நான் போனதும், ”என்னப்பா நீயி… அந்த ஞானப்பழம் வாங்க போன முருகன் கணக்கா, லீவுக்கு ஊரச்சுத்தி போயிட்டு ஆளையே காணோமே… இன்னைக்கு விநாயகர் சதுர்த்தி.. இந்தா கொழுக்கட்டை சாப்பிடு”னு பாசத்தோட கொடுத்தாரு…
”நான் என்ன துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரா, காணாமல் போகுறதுக்கு? எங்கே போனாலும், உங்க டீக்கடைக்கு வந்துடுவேன் மாஸ்டர்… கொடுங்க கொழுக்கட்டைய”னு வாங்கி சாப்பிட ஆரம்பித்தேன்.
’சரி அந்த ஜெகதீப் தன்கர் எங்கப்பா போனாரு?’னு மாஸ்டர் கேக்குறாரு… ”நீங்க மட்டுமில்ல இந்த நாடே அதே தான் கேக்குது… ஆனா ஜி தான் சொல்ல மாட்டேங்குறாரே”னு கிளம்பிட்டேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

▶படிக்காதவன்™✍
பொண்ணு/மாப்பிள்ளைங்க போடுற ரூல்ஸை பாத்தா
சிட்டிக்குள்ள போடுற ட்ராஃபிக் ரூல்ஸே பரவாயில்லைங்கிற மாதிரி இருக்கு…

Joe…😎😎
பெரியாரை கொள்கைத்தலைவரா வச்சிட்டு பகவத் கீதை புக் குடுப்பான், பண்டிகைக்கு விஷ் பண்ணுவான்,
அம்பேத்கர கொ. தலைவர் ன்னு சொல்லுவான், ஆனா ஒரு தலித் கொலைக்கு கண்டனம் கூட தெரிவிக்க மாட்டான்,
காமராஜரை கொள்கைத்தலைவர் ன்னு சொல்வான், ஆனா நீட் மட்டும்தான் படிப்பா ன்னு கேட்பான்..
✒️Writer SJB✒️
பக்தியோட கோயிலுக்கு போறவனும்
புது செருப்பு வாங்கி போட்டுட்டு போற அன்னைக்கு பயத்தோடு தான் கோயிலுக்கு போவான்..!

✒️Writer SJB✒️
தெருநாயிடம் ஒரு கேள்வி ~
ஏன் நீங்கள் பைக் ஓட்டுபவர்களை துரத்தி போய் கடிக்கிறீங்க ?
சதை கறி எல்லாம் அவங்க தின்னுட்டு எங்களுக்கு வெறும் எலும்பு மட்டும் போடுறாங்க அதனாலதான்..!

✒️Writer SJB✒️
பெண் கேட்க போகும் போது கேவலமாகவும்
வாகனம் ஓட்டும்போது கடவுளாகவும் பார்க்கப்படுகிறார்
ஆம்புலன்ஸ் டிரைவர்.

ArulrajArun
பிள்ளையாரை சுத்தி சுத்தி கும்பிட்டா எதாவது பிரயோஜனம் இருக்கு
பிள்ளையாரை தூக்கி கொண்டு ஊர்வலமாக சுத்தி சுத்தி கும்பிடுவதால் continue….

காவ்யா
பட்டம் – முரண்பாடு
நாத்திகர் கமலுக்கு ‘ஆழ்வார்பேட்டை ஆண்டவர்’
நிதானமாக பாடல் போட்டுக் கொடுக்கும் ரஹ்மானுக்கு ‘இசைப்புயல்’ பட்டம்!
‘கை’வித்தை (விக்கெட் கீப்பிங் அண்டு பேட்டிங்) காட்டும் தோனிக்கு ‘தல’ தோனி பட்டம்!

ArulrajArun
ஏங்க கூமாபட்டி வாங்க வாங்கன்னு கூப்பிட்டு ட்டு இருக்கும் போது வாய்ப்பு கூமாபட்டி க்கு வரும்னு எல்லாரும் நினைச்சுட்டு இருப்போம்
ஆனா அதான் இல்ல
ஏங்க கூமாபட்டி வாங்க வாங்கன்னு கூப்பிட்டு ட்டு இருந்தான் பாரு அவனுக்கு தான் அந்த வாய்ப்பு கிடைச்சிருக்கு

திருப்பூர் சாரதி
எல்லாத் தொகுதிகள்லயும் இந்த விஜய்தான் நிற்கப்போறேன்!
ஒரே தொகுதியில் எத்தனை ஓபிஎஸ், எத்தனை கனிமொழி நின்னாங்கன்னு அவருக்கு தெரியுமா?