மண்டைய மறைச்சாலும் கொண்டைய மறைக்காத ஆளுநரு: அப்டேட் குமாரு

Published On:

| By Selvam

update kumar october 25

‘அண்ணாமலையை மிஞ்சி அரசியல் பண்றதுல ஆளுநர் ரவி ரொம்ப கெட்டிக்காரரா இருக்காரு. பாவம் ஆனா மண்டையை மறைச்சவரு கொண்டைய மறைக்க மறந்துட்டாரேனு சுண்டல் சாப்பிடும்போது நம்ம ஃபிரண்டு கேட்டாப்ல.

’ஆளுநர் எதைய்யா மறைக்க மறந்தாரு”னு கேட்டேன். ‘அதாவது… சுதந்திரப் போராட்ட வீரர்களை தமிழ்நாடு அரசு மதிக்க மாட்டேங்குதுனு ஒரு டயலாக் விட்டாரு. ஆனா சுதந்திர போராட்ட வீரரான 100 வயசைக் கடந்த தோழர் சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்குறத தன்னோட கையெழுத்த போடாம நிப்பாட்டி வச்சிருக்காரு. இவரெல்லாம் சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பத்தி பேசலாமாண்ணே?’ அப்படினு கேட்டாப்ல. நல்ல கேள்விப்பானு அவர் முதுகுல தட்டிக் கொடுத்துட்டு வந்தேன்.

ADVERTISEMENT

நீங்க அப்டேட் பாருங்க.

கடைநிலை ஊழியன்

ADVERTISEMENT

12 pm scenario in office – மச்சான் எங்க டா இருக்க.. place ல ஆள காணும்.. டீ குடிக்க போயிட்டியா.. ஆமா பெருங்களத்தூர்ல டீ குடிச்சுட்டு இருக்கேன்..

ADVERTISEMENT
சரண்யா
நாலு நாள் பேங்க் லீவு னா, பேங்க் காணா போயிடுமா என்ன, லியோ பட வில்லன் மாதிரி வந்துட்டே இருக்கீங்க.
Mr.Ego
“என் மேல் விழுந்த மழைத்துளியே… இத்தனை நாளாய் எங்கிருந்தாய்..”
மாடில tank நிறைஞ்சி தண்ணி கீழ சிந்துதுடா..motor ah ஆஃப் பண்ணுடா …. பரதேசி….
update kumar october 25
ArulrajArun

ஆரியம், திராவிடம் இருக்கிறதா, இல்லையா என அறிஞர்கள்தான் கூற வேண்டும்; நான் அந்த அளவுக்கு படித்தவன் அல்ல – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

# உங்க கட்சி பேரு என்னான்னு கேட்டேன் மயங்கிட்டாரு

update kumar october 25

பலூன் ஒடஞ்சிருச்சேன்னு அழறவங்க இல்லடா இந்த 90’s கிட்ஸ்சு..!!
ஒடஞ்ச பலுன்ல முட்ட செஞ்சு, அத வாயில வச்சு நர நரன்னு கடிச்சு, அந்த சத்தத்தை என்ஜாய் பண்ணி அப்புறம் எங்க மண்டைல நாங்களே நங்குன்னு ஒடச்சு சந்தோஷப்பட்டுப்போம்..!!

update kumar october 25
லாக் ஆஃப்

வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!

விஷமிகளால் பெட்ரோல் வெடி குண்டு தாக்குதல்: ஆளுநர் மாளிகை

சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம்: ஆளுநருக்கு வலியுறுத்திய அமைச்சர்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share