இந்தியக் கடலோர காவல்படைக்கு 6 எம்கே-II மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்கள் மற்றும் இந்தியக் கடற்படைக்கு தரையிலிருந்து வானில் உள்ள இலக்கை அழிக்கவல்ல ஷெட்டில் ஏவுகணைகள் ஆகியவற்றை ரூ.5,083 கோடி மதிப்பில் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.
டெல்லியில் மார்ச் 3- தேதி நடைபெற்ற நிகழ்ச்சியி, இந்த ஒப்பந்தம் பாதுகாப்புத்துறை செயலாளர் ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில் கையெழுத்தானது.
இவற்றில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படும் திட்டத்தின் கீழ், பெங்களூருவில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடன் ரூ.2,901 கோடி மதிப்பில் 6 எம்கே-II மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்களை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் கையெழுத்தானது.
ரஷ்யாவின் ஜெஎஸ்சி ரோசாபோரான் எக்ஸ்போர்ட் நிறுவனத்துடன் ரூ.2,182 கோடி மதிப்பில் ஷெட்டில் ஏவுகணைகளை ஒப்பந்தம் செய்ய கையெழுத்தானது.
