விஜய்யின் தவெக தொண்டர்களை விமர்சித்து நடிகை ஜூலி இன்றும் (மார்ச் 3)-ந் தேதி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று சினிமாவில் நுழைந்தவர் நடிகை ஜூலி. வேலூரில் விஜய் பேசிய, ஜல்லிக்கட்டு காளை குட்டி கதையை விமர்சித்து ஒரு வீடியோ போட்டிருந்தார் ஜூலி.
இதனை முன்வைத்து தவெகவினர் ஜூலியை கடுமையாக விமர்சித்தனர். இதனால் தம்மை ஆபாசமாக விமர்சித்த தவெகவினரை கிண்டலடித்து அடுத்தடுத்து புதிய புதிய வீடியோக்களை ஜூலி வெளியிட்டு வருகிறார்.
தமக்கு 3-வது திருமணம் என விமர்சிக்கும் தவெகவினருக்கு பதில் தந்து நடிகை ஜூலி இன்று மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
நடிகை ஜூலி இன்று வெளியிட்ட வீடியோ:
