டெல்லியில் சிபிஐ தலைமை அலுவலகம் முன்பாக விஜய்க்கு ஆதரவு தெரிவித்து தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் முழக்கமிட்டனர்.
கரூர் துயர சம்பவம் தொடர்பாக டெல்லியில் சிபிஐ தலைமை அலுவலகத்தில் விஜய்யிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையில் கரூர் சம்பவம் தொடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் விஜய்யை பார்ப்பதற்காக சிபிஐ தலைமை அலுவலகம் முன்பாக டெல்லி தவெக தொண்டர்கள் கட்சி கொடியுடன் ஒன்று கூடினர். அப்போது, திடீரென விஜய் வாழ்க! தவெக வாழ்க! என அவர்கள் முழக்கமிட்டனர்.
