சென்னையில் இன்று (ஜனவரி 12) ஒரு சவரன் தங்கம் ரூ.13,120 வரை உயர்ந்துள்ளது. இதே போல் ஒரு கிராம் வெள்ளி ரூ.12 வரை உயர்ந்துள்ளது நகைப்பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சர்வதேச சந்தை விலை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, உலக அளவில் தங்கம் மற்றும் வெள்ளியின் தேவை, போர் பதற்றங்கள் உள்ளிட்ட பல காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் இன்று ஒரு சவரன் தங்கம் ரூ. 1,760 வரை உயர்ந்துள்ளது. அதேபோல் ஒரு கிலோ வெள்ளி ரூ. 12000 வரை உயர்ந்துள்ளது.
இன்றைய தங்கம் விலை
சென்னையில் இன்று ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத்தங்கம் ரூ.220 வரை உயர்ந்து ரூ. 13,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,760 வரை உயர்ந்து ரூ. 1,04,960க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் 18 கேரட் தங்கம் ரூ.180 உயர்ந்து ரூ.10,945க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.12 உயர்ந்து ரூ.287க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.12,000 வரை உயர்ந்து ரூ.2,87,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் ஒரு சவரன் தங்கம் விலை நிலவரம்
| 11-1-2026 | 1,03,200 |
| 10-1-2026 | 1,03,200 |
| 9-1-2026 | 1,02,400 |
| 8-1-2026 | 1,02,000 |
| 7-1-2026 | 1,02,400 |
| 6-1-2026 | 1,02,640 |
| 5-1-2026 | 1,02,080 |
| 4-1-2026 | 1,00,800 |
| 3-1-2026 | 1,00,800 |
| 2-1-2026 | 1,00,640 |
கடந்த 10 நாட்களில் ஒரு கிராம் வெள்ளி விலை நிலவரம்
| 11-1-2026 | 275 |
| 10-1-2026 | 275 |
| 9-1-2026 | 268 |
| 8-1-2026 | 272 |
| 7-1-2026 | 277 |
| 6-1-2026 | 271 |
| 5-1-2026 | 266 |
| 4-1-2026 | 257 |
| 3-1-2026 | 257 |
| 2-1-2026 | 260 |
