முதலீட்டாளர்கள் கவனத்துக்கு: டர்டில்மின்ட் ஃபின்டெக் ஐபிஓ தேதி & விலை இது தான்!

Published On:

| By Santhosh Raj Saravanan

Turtlemint Fintech IPO to open on June 19 check price band

டிஜிட்டல் காப்பீட்டு நிறுவனமான டர்டில்மின்ட் ஃபின்டெக் சொல்யூஷன்ஸின் (Turtlemint) ஐபிஓ ஜூன் 19 வெள்ளிக்கிழமை அன்று தொடங்குகிறது. இந்த ஐபிஓ அடுத்த வாரம் ஜூன் 23 செவ்வாய்க்கிழமை அன்று முடிவடைகிறது. டர்டில்மின்ட் ஃபின்டெக் இன்று தனது ஐபிஓ-வின் கீழ் வழங்கப்படும் பங்குகளுக்கான விலை வரம்பை அறிவித்தது. இந்நிறுவனம், தனது ஐபிஓ-வின் கீழ், ரூ.1 முகமதிப்புள்ள (face Value) ஒவ்வொரு பங்கிற்கும் ரூ.144 முதல் ரூ.152 வரையிலான விலை வரம்பு நிர்ணயித்துள்ளது. இந்த நிதி நிறுவனம் தனது ஐபிஓ மூலம் ரூ.883 கோடியைத் திரட்ட விரும்புகிறது.

ரூ.661 கோடி மதிப்புள்ள பங்குகள் வெளியீடு:

டர்டில்மின்ட் ஃபின்டெக் சொல்யூஷன்ஸின் ரூ.883 கோடி மதிப்பிலான ஆரம்பப் பொது வெளியீட்டில் (IPO) ரூ. 661 கோடி மதிப்புள்ள 43,468,552 புதிய பங்குகள் உட்பட மொத்தம் 58,070,398 ஈக்விட்டி பங்குகள் வெளியிடப்படும். நிறுவனத்தின் புரமோட்டர்கள், OFS (ஆஃபரிங் ஆஃபர்) மூலம் ரூ.222 கோடி மதிப்புள்ள 14,601,846 பங்குகளை வெளியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ஒரு லாட்டில் 98 பங்குகள் வழங்கப்படும்:

இந்த IPO-வின் கீழ் சில்லறை முதலீட்டாளர்கள் ஒரு லாட்டிற்கு குறைந்தபட்சம் ரூ.14,896 முதலீடு செய்ய வேண்டும். சில்லறை முதலீட்டாளர்களுக்கு ஒரு லாட்டிற்கு 98 பங்குகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சில்லறை முதலீட்டாளர்கள் அதிகபட்சமாக 13 லாட்டுகள் அல்லது 1,274 பங்குகளுக்கு விண்ணப்பிக்கலாம். இதன் மொத்த முதலீடு ரூ.193,648 ஆகும்.

ஜூன் 24ஆம் தேதி பங்கு ஒதுக்கீடு:

அடுத்த வாரம் ஜூன் 23 அன்று IPO முடிவடைந்ததைத் தொடர்ந்து, ஜூன் 24 அன்று பங்குகள் ஒதுக்கப்படும். பங்குகள் ஒதுக்கப்படாத முதலீட்டாளர்களுக்கு ஜூன் 25 அன்று பணம் திரும்ப வழங்கப்படும். மேலும், பங்குகள் ஒதுக்கப்பட்ட முதலீட்டாளர்களின் பங்குகள் ஜூன் 25 அன்று அவர்களின் டிமேட் கணக்குகளில் வரவு வைக்கப்படும்.

ADVERTISEMENT
எப்போது பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும்?

இது ஒரு முதன்மைப் பங்கு வெளியீடாகும் (IPO). இது பிஎஸ்இ (BSE) மற்றும் என்எஸ்இ (NSE) ஆகிய இரண்டு முக்கிய உள்நாட்டுப் பங்குச் சந்தைகளிலும் பட்டியலிடப்படும். டர்டில்மின்ட் ஃபின்டெக் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் ஜூன் 29ஆம் தேதி, திங்கட்கிழமை அன்று உள்நாட்டுப் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Photo of author
Santhosh Raj Saravanan
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share