மக்களவை தேர்தல் தள்ளிப்போகிறதா? – முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பேட்டி!

Published On:

| By Selvam

Ts Krishnamurthy says Election is not delayed

தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா செய்துள்ளதால், தேர்தல் நடைமுறையில் ஏதும் பாதிப்பு ஏற்படாது என்று முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி இன்று (மார்ச் 11) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தல் ஆணையர் அருண் கோயல் கடந்த மார்ச் 9-ஆம் தேதி ராஜினாமா செய்தார். இந்த விவகாரம் இந்திய அரசியலில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இதுகுறித்து முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி நியூஸ் 18 செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,

“தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா செய்தது தேர்தல் நடைமுறையில் பாதிப்பை ஏற்படுத்தாது. இதற்கு முன்பாக ஒரே ஒரு தலைமை தேர்தல் ஆணையர் தலைமையிலும் தேர்தல்கள் நடைபெற்றுள்ளது.

ADVERTISEMENT

கடந்த 35 வருடமாக தான் மூன்று தேர்தல் ஆணையர்கள் அமைக்கப்பட்டு தேர்தல் நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையத்தின் மீது நம்பகத்தன்மை அதிகரிப்பதற்காக மூன்று பேர் அங்கம் வகிக்கும் குழுவை அமைத்தார்கள்.

திடீரென்று தற்போது இரண்டு தேர்தல் ஆணையர்கள் இல்லை. நிச்சயமாக இரண்டு பேரை உடனடியாக அரசு நியமிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாக தெரிகிறது.

ADVERTISEMENT

அநேகமாக மார்ச் 14-ஆம் தேதி புதிய தேர்தல் ஆணையரை நியமிக்க இருப்பதாக செய்திகள் வருகின்றன.

அதனால் தேர்தல் நடைமுறையில் ஏதும் பாதிப்பு ஏற்படாது என்று தான் நான் கருதுகிறேன். அதன்பிறகு தான் தேர்தல் தேதி அறிவிக்கப்படும்” என்றார்.

தொடர்ந்து தேர்தல் ஆணையரை நியமனம் செய்வதற்காக மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டம் குறித்த உங்கள் கருத்து என்ன என்று நெறியாளர் எழுப்பிய கேள்விக்கு,

“உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருவதால் அதுகுறித்து கருத்து கூற விரும்பவில்லை” என்று டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

“புதிய சட்டத்தின் படி கூடவே கூடாது” : தேர்தல் ஆணையர் நியமனத்துக்கு எதிராக காங்கிரஸ் வழக்கு!

தேர்தல் பத்திரங்கள்.. எஸ்பிஐ வங்கிக்கு கெடு: உச்சநீதிமன்றத்தில் நடந்தது என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share