தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம்!

Published On:

| By Monisha

transport union strike on January 9

தமிழகத்தில் வரும் ஜனவரி 9 ஆம் தேதி முதல் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது. transport union strike on January 9

போக்குவரத்துத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், கருணை அடிப்படையில் விண்ணப்பித்துக் காத்திருக்கும் நபர்களுக்கு பணி வழங்க வேண்டும், ஓய்வுபெற்றவர்களுக்கு பஞ்சப்படி வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 19 ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நோட்டீஸ் வழங்கி இருந்தது.

ADVERTISEMENT

இதனையடுத்து தொழிற்சங்கத்துடன் அரசு நடத்திய முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. தொடர்ந்து ஜனவரி 3 ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை இன்று (ஜனவரி 3) நடைபெற்றது.

ADVERTISEMENT

இதில் தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் ரமேஷ், மேலாண் இயக்குநர் இளங்கோ, மாநகர மேலாண் போக்குவரத்து இயக்குநர் ஆல்வின் ஜான், அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டியு, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் பங்கேற்றன.

ஆனால் இன்று நடைபெற்ற 2ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதனிடையே, பொங்கலுக்கு பிறகு பேச்சுவார்த்தை நடத்தி அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

ADVERTISEMENT

ஆனால் ஜனவரி 9 ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடத்த போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

இது குறித்து சிஐடியு தொழிற்சங்கத்தைச் சேர்ந்த சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

“ஆறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்துப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. மற்ற கோரிக்கைகளை பொங்கல் பண்டிகைக்குப் பிறகு பேசி தீர்வு காணலாம் என்று தமிழக அரசு தரப்பில் கூறப்படுகிறது.

ஆனால், ஓய்வுபெற்ற போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்கு பஞ்சப்படியை வழங்கும் விவகாரத்தில் எந்த சமரசமும் செய்ய முடியாது.

ஓய்வுபெற்றவர்களுக்கு ஏதேனும் தருகிறோம் என்று பேச்சுவார்த்தையின்போது கூறவில்லை. அதனால், ஜனவரி 9ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கும்” என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

எல்லாமே ரொம்ப மோசமா இருக்கு… வைரலாகும் தங்கலான் நடிகையின் பதிவு!

ஹெல்த் டிப்ஸ் : மன அழுத்தத்துடன் இருக்கிறீர்களா?

transport union strike on January 9

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share