ஹெல்த் டிப்ஸ் : மன அழுத்தத்துடன் இருக்கிறீர்களா?

Published On:

| By Kavi

foods that help reduce stress

வாழ்க்கை முறை மாறிவிட்ட இந்த காலத்தில் இயந்திரத்தனமாக ஓடிக்கொண்டே இருக்கிறோம். இதனால் மன அழுத்தம் அதிகமாகிறது. நம்மில் பலரும் உடல் நலத்துக்கு கொடுக்கும் ஆரோக்கியத்தை மன நலத்துக்குக் கொடுப்பதில்லை. foods that help reduce stress

இதற்காகத் தனியாகக் கவனம் செலுத்தவில்லை என்றாலும் அன்றாடம் நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகள் மூலம் மன அழுத்தத்தை குறைக்கலாம்.

தியானம், உடற்பயிற்சி போன்ற மன அழுத்தத்தை நிர்வகிக்க பல்வேறு வழிகள் இருந்தாலும், பெரும்பாலும் கவனிக்கப்படாத ஒரு அம்சம் நமது உணவின் பங்கு ஆகும். நாம் உட்கொள்ளும் உணவுகள் மன அழுத்தத்தை நிர்வகிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் உணவுகளை இங்கு பார்ப்போம்…

மீன்கள்

கெண்டை, கானாங்கெளுத்தி மற்றும் மத்தி மீன் ஆகியவற்றில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன, இது உங்கள் உடலில் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்களின் உற்பத்தியைக் குறைக்க உதவுகிறது. இதன்மூலம்  மனப்புழுக்கமும், பதட்டமும் குறைகிறது.

முட்டை

வைட்டமின் பி சத்து நிறைந்த முட்டை, செரோடோனின் ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்கிறது. மனநிலை, தூக்கம், செரிமானம் போன்ற உடல் செயல்பாடுகளில் செரோடோனின் முக்கிய பங்கு வகிக்கிறது.

முட்டைகளை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் செரோடோனின் ஹார்மோன் அதிகரித்து மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

ப்ளூபெர்ரி

ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி உள்ளிட்ட பழங்களில் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன, அவை மன அழுத்தத்தைக் குறைப்பதோடு உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கிறது.

கீரை வகைகள்

கீரை, முட்டைக்கோஸ் மற்றும் பிற இலை வகை உணவுகளில் ஃபோலேட் (வைட்டமின் பி- 9 ) நிறைந்துள்ளது, கீரை வகைகளைச் சாப்பிடுவது மனநிலையைச் சீராக்க உதவுகிறது மற்றும் மனச்சோர்வின் அறிகுறிகளைக் குறைக்கிறது.

ஓட்ஸ்

ஓட்ஸில் கார்போ ஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ளன, இது செரோடோனின் உற்பத்தியை அதிகரித்து, மனநிலை மேம்படுத்தி, மன அழுத்தத்தைக் குறைக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

விராட், ரோஹித்தின் அதிரடி முடிவால்… பெரும் தலைவலியில் சிக்கித்தவிக்கும் பிசிசிஐ

அதிமுக ஐடிவிங் கூட்டம் : எடப்பாடி நடத்திய மாஸ்டர்கிளாஸ்!

foods that help reduce stress

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel