டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Selvam

top ten news today in Tamil January 20 2024

பிரதமர் மோடி  சாமி தரிசனம்! top ten news today in Tamil January 20 2024

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் மற்றும் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில்களில் பிரதமர் மோடி இன்று (ஜனவரி 20) சாமி தரிசனம் செய்வதால் பொது தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஸ்டாலின் சேலம் பயணம்!

சேலத்தில் நாளை நடைபெற உள்ள திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று சேலம் செல்கிறார்.

பேருந்து சேவை துவக்கம்!

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகங்களில் 100 புதிய பேருந்துகளை பயணிகள் சேவைக்காக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று துவக்கி வைக்கிறார்.

லாரி ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்!

மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் லாரி ஓட்டுநர்கள் இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

வானிலை நிலவரம்!

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இன்று லேசான மழை பெய்யும்.

சலார் ஓடிடி ரிலீஸ்!

பிரபாஸ் நடிப்பில் வெளியான சலார் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 609-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நீதிபதிகள், வழக்கறிஞர்கள் கிரிக்கெட் போட்டி!

சென்னை சேப்பாக்கம் விளையாட்டு மைதானத்தில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் இடையே கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.

சென்னை, திருவள்ளுவர் பள்ளிகள் இயங்கும்!

மிக்ஜாம் புயல் மற்றும் மழை, வெள்ளத்தால் விடப்பட்ட விடுமுறையை ஈடுகட்ட சென்னை, திருவள்ளுவர் மாவட்டங்களில் இன்று பள்ளிகள் இயங்கும்.

இன்றைய புரோ கபடி லீக் போட்டிகள்!

இன்றைய புரோ கபடி லீக் போட்டியில் தபாங்க் டெல்லி, யு மும்பா அணிகளும், தெலுங்கு டைட்டன்ஸ், யுபி யோதாஸ் அணிகளும் மோதுகின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: சேமியா முட்டை அடை

டிஜிட்டல் திண்ணை: திமுக தேர்தல் பணிகள் ஸ்டார்ட்… கூட்டணிக் கட்சிகள் கேட்டது கிடைக்குமா? ஸ்டாலினுக்குச் சென்ற ரிப்போர்ட்!

top ten news today in Tamil January 20 2024

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share