கிச்சன் கீர்த்தனா: சேமியா முட்டை அடை
வீக் எண்ட் என்றாலே விதவிதமான உணவுகளை செய்து சாப்பிட விரும்புவோம். இப்போது, குளிர்காலம் என்பதால் சூடாக ஏதாவது சாப்பிட விரும்புவோம். சேமியாவில் முட்டை சேர்த்து இந்த சேமியா முட்டை அடை செய்யுங்கள். வீக் எண்டை கொண்டாடுங்கள்.
என்ன தேவை?
சேமியா – 250 கிராம்
முட்டை – 3
பெரிய வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 4
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்ப
எப்படிச் செய்வது?
ஒரு கடாயில் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். அதில் சேமியாவைச் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வேகவிடவும். பின்னர் அந்த நீரை வடிகட்டிவிட்டு குளிர்ந்த நீரை ஊற்றி மீண்டும் வடிகட்டவும். ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும். இதில் வேகவைத்த சேமியாவை தேவைக்கேற்ப சேர்த்து, தோசைக்கல்லில் அடையாக ஊற்றி இரண்டு பக்கமும் வேகவிட்டு எடுக்கவும். சுவையான சேமியா முட்டை அடை தயார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பயண செலவே பாதி நிவாரணம் : அப்டேட் குமாரு