ADVERTISEMENT

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By christopher

Top 10 News Tamil march 16 2024

தேர்தல் தேதி அறிவிப்பு! Top 10 News Tamil march 16 2024

நாட்டின் 18-வது நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி இன்று (மார்ச் 16) மாலை 3 மணிக்கு டெல்லியில் உள்ள விஞ்ஞான பவனில் அறிவிக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

கவிதா நீதிமன்றத்தில் ஆஜர்!

பிஆர்எஸ் கட்சியின் தலைவரும் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளுமான கே கவிதாவை  அமலாக்கத்துறையினர் நேற்று கைது செய்த நிலையில், இன்று காலை டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்த உள்ளனர்.

ADVERTISEMENT

கவிதா கைது… போராட்டம்!

கே.கவிதா கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தெலங்கானாவில் இன்று மாநிலம் தழுவிய போராட்டத்திற்கு பிஆர்எஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

ADVERTISEMENT

இரட்டை இலை சின்னம் வழக்கில் தீர்ப்பு!

இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தொடர்ந்த வழக்கில் இன்று மாலை 3 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கார்கே தொகுதியில் மோடி பிரச்சாரம்!

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் சொந்த தொகுதியான குல்பர்கா மக்களவைத் தொகுதியில் பிரதமர் மோடி இன்று 2 மணிக்கு பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

தமிழ வேள் கோ.சாரங்கபாணி நினைவு நாள்!

தமிழ்­மொழி சிங்­கப்­பூ­ரில் அதி­காரத்­துவ மொழி­யாக தலைநிமிர வித்­திட்­ட தமிழ வேள் கோ.சாரங்கபாணியின் 50ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

தெலுங்கானாவில் துணை குடியரசுத்தலைவர்!

துணை குடியரசுத்தலைவர் ஜக்தீப் தன்கர் இன்று தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்திற்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்.

தமிழ்நாட்டில் வெப்பநிலை உயரும்!

தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சென்னையில் இன்று பெட்ரோல் ஒரு லிட்டர் 100.75 ரூபாய்க்கும், டீசல் ஒரு லிட்டர் 92.34 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

போக்குவரத்து மாற்றம்!

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமான பணி காரணமாக ஓ.எம்.ஆர் சாலையில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா : வாழைப்பழ மில்க் ஷேக்

OnePlus-ன் புது வரவு…. விலை விவரம்! இதோ….

Top 10 News Tamil march 16 2024

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share