OnePlus-ன் புது வரவு…. விலை விவரம்! இதோ….
பிரபல ஸ்மார்ட் போன் நிறுவனமான ஒன்பிளஸ் தற்போது புது வரவாக கொண்டுவந்துள்ள OnePlus Nord CE 4 5ஜி என்ற புதிய ஸ்மார்ட் போனை வரும் ஏப்ரல் 1ஆம் தேதி மாலை 6 மணிக்கு இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.
இந்த OnePlus Nord CE 4 ஸ்மார்ட் போன் ஆனது ரூ.27,000 முதல் ரூ.30,000 விலையில் விற்பனைக்கு வர இருக்கிறது. மேலும் பல தகவல்களை அறிமுக விழாவில் வெளியிட இருக்கிறது ஒன்பிளஸ் நிறுவனம்.
OnePlus Nord CE 4 ஸ்மார்ட் போனின் அம்சங்களைப் பார்க்கலாம்
Nord CE 4-ன் முக்கிய அம்சமாகப் பார்க்கப்படுவது இதன் கேமரா. 50MP+8MP டூயல் ரியர் மற்றும் 16MP செல்பி கேமராவை கொண்டுள்ளது.
மெமரி கார்டு வசதியுடன், 12GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் என்ற வேரியண்டில் வருகிறது.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 சிப்செட் இடம் பெற்றுள்ளது.
கூடுதல் அம்சமாக அட்ரினோ 732 ஜிபியு கிராபிக் கார்டு உள்ளது.
டிஸ்ப்ளேவை பொருத்தவரை 6.72 இன்ச் புல் எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளே மற்றும் 120 ரெப்ரெஷ் ரேட், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்பிங் ரேட், 1800 நீட்ஸ் பீக் ப்ரைட்னஸ் போன்ற அம்சங்களுடன் வருகிறது.
OnePlus Nord CE 4 பட்ஜெட்டிற்குள்ளான தரமான கேமரா, டிஸ்ப்ளே மற்றும் நல்ல ஸ்டோரேஜ் போன்ற அம்சங்களுடன் அறிமுகமாகும் 5ஜி ஸ்மார்ட் போன் ஆகும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-பவித்ரா பலராமன்
நாம் தமிழர் கட்சி சின்னம் கோரிய வழக்கு: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு!
4 புதிய மாநகராட்சிகள் : முதல்வர் அறிவிப்பு!