இந்தி மொழி நமது அடையாளம்; நமது கலாசார பாரம்பரியம் என்று பிரதமர் மோடி புகழ்ந்துள்ளார்.
1949-ம் ஆண்டு இந்தி மொழியும் இந்தியாவின் அலுவல் மொழிகளில் ஒன்றாக ஏற்கப்பட்டது. இந்த நாள் இந்தி மொழி தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்தி மொழி தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: இந்தி தினத்தில் மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். இந்தி மொழி வெறும் தொடர்பு ஊடகம் மட்டுமல்ல. அது நமது அடையாளம் மற்றும் கலாச்சாரத்தின் பாரம்பரியமாகும்.
இந்தத் தருணத்தில், இந்தி உட்பட அனைத்து இந்திய மொழிகளையும் வளப்படுத்தவும், அவற்றை வரும் தலைமுறையினருக்கு பெருமையுடன் கொண்டு செல்லவும் நாம் அனைவரும் உறுதிமொழி எடுப்போம். உலக அரங்கில் இந்தி மீதான மரியாதை அதிகரித்து வருவது நம் அனைவருக்கும் பெருமையையும் உத்வேகத்தையும் அளிக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
