ஆவின் நெய் ரூ.50 தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த தள்ளுபடி விலை மார்ச் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையமான ஆவின் நிறுவனம், நெய், வெண்ணெய், தயிர் மற்றும் பன்னீர், ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றை 10,000க்கும் மேற்பட்ட ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது.
ஆவின் நெய்யினை கடந்த மூன்று மாதங்களாக லிட்டர் ஒன்றுக்கு ரூ.50 தள்ளுபடி செய்து விற்பனை செய்து வருகிறது. இந்த தள்ளுபடி விலையில் ஆவின் நெய்யினை வருகிற மார்ச் 31ஆம் தேதி வரை ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து கொள்முதல் செய்துகொள்ளலாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த மூன்று மாதங்களாக 200 கிராம் பன்னீர் சலுகை விலையில் ரூ.120லிருந்து ரூ.10 குறைத்து ரூ.110க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த தள்ளுபடியினையும் தொடர்ந்து நீட்டிக்க ஆவின் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
-இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
போதைப்பொருள் விவகாரம்… எடப்பாடி மீது மான நஷ்ட ஈடு வழக்குத் தொடர்ந்த திமுக!
Lokesh Kanagaraj: ‘ரியல் வெறித்தனம்’ டோலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் லோகேஷ்
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு… உச்ச நீதிமன்றத்தில் ஐ.பெரியசாமி மேல்முறையீடு!