திருவாரூரில் தேர்தல் பணம் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் பாஜக பிரமுகர் மதுசூதனனை அரிவாளால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே காவனூர் பகுதியை சேர்ந்தவர் மதுசூதனன். இவர் திருவாரூர் பாஜக விவசாய அணி முன்னாள் மாவட்ட செயலாளராக இருந்துள்ளார். அப்பகுதியில் ஜெராக்ஸ் கடை வைத்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று (மே 8) இரவு தனது வீட்டில் இருந்த மதுசூதனனை ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாளால் சரமாரியாக தாக்கினர். உடனடியாக அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேல்சிகிச்சைக்காக மதுசூதனன் தஞ்சாவூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தநிலையில், மசூதனன் மனைவி ஹரிணி கொடுத்த புகாரின் அடிப்படையில், திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர், பொதுச் செயலாளர் செந்திலரசன் உள்பட அடையாளம் தெரியாத 4 நபர்கள் மீது Cr. No. 153/ 24 u/s.307 IPC r/w. 109 IPC ஆகிய பிரிவுகளின் கீழ் திருவாரூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் பணத்தை பங்கு பிரிப்பது தொடர்பாக பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கர் மற்றும் மசூதனன் இடையே பிரச்சனை ஏற்பட்டதாகவும், இதனால் மாவட்ட பொதுச்செயலாளர் செந்தில் அரசனின் தூண்டுதலின் பேரில் மதுசூதனனை கூலிப்படை வெட்டியதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டிஜிட்டல் திண்ணை: பங்குச்சந்தை கடும் சரிவு… மோடி ஷாக்! ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறி?