அதிமுக மாநிலங்களவை தேர்தல் வேட்பாளராக தம்பிதுரை அறிவிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு, பிகார் உள்ளிட்ட 10 மாநிலங்களில் காலியாகும் 37 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் மார்ச் 16ஆம் தேதி நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் முடிவடைகிறது.
இந்நிலையில் அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிக்கப்பட்டுள்ளார்.
“அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 16.3.2026 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக மு. தம்பிதுரை, தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தம்பிதுரை மக்களவைக்கு 5 முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2019 மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து 2020 முதல் மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வருகிறார். இந்தநிலையில் மீண்டும் ராஜ்யசபா எம்.பி. பதவிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
