மன நிறைவோடு இருக்கிறோம் – செல்வப்பெருந்தகை பேட்டி!

Published On:

| By Kavi

திமுக காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கும் நிலையில் மன நிறைவோடு இருப்பதாக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ்க்கு 28 எம்எல்ஏ சீட், ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கீடு செய்து இன்று (மார்ச் 4) ஒப்பந்தம் கையெழுத்தானது. 

ADVERTISEMENT

இதையடுத்து அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை,   “திமுக கூட்டணியில் காங்கிரஸ்க்கு 28 எம்எல்ஏ, ஒரு மாநிலங்களவை சீட் என ஒப்பந்தம் கையெழுத்தானது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, ராஜ்யசபா வேட்பாளர் குறித்த அறிவிப்பை வெளியிடும். 

கூட்டணி தொடர்பாக எந்த தாமதமும் இல்லை.  சரியான நேரத்தில் சரியான முடிவை காங்கிரஸும் திமுகவும் எடுத்துள்ளது. மன நிறைவாக, மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று கூறினார். 

ADVERTISEMENT
Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share