21 கட்சிகளுடன் திமுக பிரம்மாண்ட கூட்டணி!

Published On:

| By Kavi

2026 சட்டமன்றத் தேர்தலில் 21 கட்சிகளுடன் திமுக பிரம்மாண்ட கூட்டணி அமைத்துள்ளது. 

காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்த நிலையில், இன்று 28+1 என ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 

ADVERTISEMENT

2026 தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துள்ளது.  அந்தவகையில் 21 கட்சிகளுடன் பிரம்மாண்ட கூட்டணி அமைந்துள்ளது.

இந்தியாவுக்கே வழிகாட்டும் முன்னுதாரணமான கூட்டணியை அமைத்துள்ளது திமுக.

ADVERTISEMENT

திமுக கூட்டணி சிதறிவிடும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மூத்த தலைவர் தமிழிசை ஆகியோர் கடந்த 2 ஆண்டுகளாக சொல்லி வந்தனர். 

நேற்றைய டெல்லி பேட்டி வரை கடந்த 2 ஆண்டுகளாக திமுக கூட்டணி உடையும் என்று கூறி வந்தார் எடப்பாடி.

ADVERTISEMENT

அதுபோன்று நடிகர் விஜய்யின் தவெக தனித்து விடப்பட்டது.

தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் ஒரே கூட்டணி – சிந்தாமல் சிதறாமல், மேலும் புதிய கட்சிகளையும் சேர்த்து 4ஆவது முறையாக தேர்தலை சந்திப்பது இதுவே முதல் முறை.

ஒரு சட்டமன்ற தேர்தலுக்கு அமைந்த கூட்டணி, அடுத்த தேர்தல் வரை நீடித்தது இல்லை என்பதுதான் இதுவரை தமிழக அரசியல் வரலாறு.

தனது தனித்துவமான ஆளுமைப் பண்பால், அரவணைக்கும் தன்மையால் புதிய வரலாறு படைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share