கொட்டிய ஆலங்கட்டி மழை : அடுத்த 7  நாட்களுக்கான வானிலை அப்டேட்!

Published On:

| By Kavi

tamilnadu rain update for next 7 days

தமிழகத்தில் அடுத்த 7 தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. tamilnadu rain update for next 7 days

தமிழகத்தில் வெயில் வாட்டி வரும் அதே வேளையில் ஒரு சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (மே 1) சூறைக்காற்றுடன் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது.  திருப்பத்தூர்  மாவட்டத்தில் நாட்றம்பள்ளி,  பங்களாமேடு, ஏரிகொடி, டோல்கேட் ஆகிய பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. தருமபுரி மாவட்டம் பொம்மிடியிலும் ஆலங்கட்டி மழை பெய்தது. 

வேலூரில் மதிய வேளையில் வெயில் கொளுத்திய நிலையில் மாலையில் ஆலங்கட்டி மழை பெய்தது.  கோவையில் வால்பாறை உள்ளிட்ட இடங்களில் லேசான மழை பெய்தது. 

இந்த நிலையில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. tamilnadu rain update for next 7 days

இதுகுறித்து இன்று (மே 1) வெளியிட்ட அறிவிப்பில்,  “தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

இதன் காரணமாக மே 1ஆம் தேதி முதல்  தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 6ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளது. 

வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நீலகிரி, ஈரோடு, கோவை, திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய 11 மாவட்டங்களில் இன்று இரவு 7 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

அதேசமயம்,  இன்று முதல் மே 3ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படலாம் என்றும் தெரிவித்துள்ளது. tamilnadu rain update for next 7 days

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share