அடுத்த 6 நாட்களுக்கு தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. rain for 6 days Weather update
தமிழகத்தில் வெயில் கொளுத்தி வரும் நிலையில் ஆங்காங்கே மழையும் பெய்து வருகிறது. கன்னியாகுமரி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் நேற்று 4 செமீ மழை பெய்துள்ளது. இன்று நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ததால் குளிர்ந்த வானிலை நிலவுகிறது.
இந்த நிலையில் மே 3 வரை தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று (ஏப்ரல் 27) வெளியிட்ட அறிவிப்பில், “தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று முதல் மே 3ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதேசமயம் மே 1ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். இதனால் தமிழகத்தில் ஒரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்” என்று கூறப்பட்டுள்ளது. rain for 6 days Weather update
