நாடாளுமன்ற நட்புறவு குழு.. தமிழக எம்.பி.க்கள் யார் யார்?

Published On:

| By Mathi

LokSabha

இந்தியாவின் நாடாளுமன்ற உறவுகளை உலக நாடுகளுடன் விரிவுபடுத்தும் முக்கிய நடவடிக்கையாக 60-க்கும் மேற்பட்ட நாடுகளுடன் நாடாளுமன்ற நட்புறவு குழுவை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா நியமித்துள்ளார்.

உலக நாடுகளின் நாடாளுமன்றங்களுடன் உரையாடல் மற்றும் பரிமாற்றங்களை வலுப்படுத்துவதன் நடவடிக்கையாக இது அமைந்துள்ளது.

ADVERTISEMENT

இந்த நட்புறவுக் குழுவில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ரவிசங்கர் பிரசாத்
எம் தம்பிதுரை
ப சிதம்பரம்
பேராசிரியர் ராம் கோபால் யாதவ்
டி ஆர் பாலு
டாக்டர் ககோலி கோஷ் தஸ்திதார்
கௌரவ் கோகோய்
கனிமொழி கருணாநிதி
மணீஷ் திவாரி
டெரெக் ஓ பிரையன்
அபிஷேக் பானர்ஜி
அசாதுதீன் ஒவைசி
அகிலேஷ் யாதவ்
கே சி வேணுகோபால்
ராஜீவ் பிரதாப் ரூடி
சுப்ரியா சுலே
சஞ்சய் சிங்
பைஜயந்த் பாண்டா
சசி தரூர்
நிஷிகாந்த் துபே
அனுராக் சிங் தாக்கூர்
பர்த்ருஹரி மஹ்தாப்
டி புரந்தேஸ்வரி
சஞ்சய் குமார் ஜா
ஹேமா மாலினி
பிப்லப் குமார் தேப்
சுதன்ஷு திரிவேதி
ஜகதாம்பிகா பால்
சஸ்மித் பத்ரா
அபராஜிதா சாரங்கி
ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே
பி வி மிதுன் ரெட்டி
பிரபுல் படேல் உள்ளிட்டோர் இந்தக் குழுக்களுக்கு தலைமை தாங்குவார்கள்.

ADVERTISEMENT

இலங்கை, ஜெர்மனி, நியுசிலாந்து, ஸ்விட்சர்லாந்து, தென்ஆப்பிரிக்கா, பூடான், சவூதி, இஸ்ரேல், மாலத்தீவுகள், அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியன் நடாளுமன்றம், தென்கொரியா, நேபாளம், பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான், இத்தாலி, ஓமன், ஆஸ்திரேலியா, கிரீஸ், சிங்கப்பூர், பிரேசில், வியட்நாம், மெக்சிகோ, ஈரான், ஐக்கிய அரபு எமிரேட் உள்ளிட்ட நாடுகள் நாடாளுமன்ற நட்புறக்குழுவில் இடம்பெற்றுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடுகளில் உள்ள தங்கள் சகாக்களுடன் நேரடியாகப் பேச்சு நடத்தவும், நாடாளுமன்ற அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும், வழக்கமான விவாதம் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக் கொள்ளவும், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், அதிக பரஸ்பர புரிதலை ஊக்குவிப்பதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share