46 முதலீட்டு திட்டங்களுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்!

Published On:

| By Kavi

தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில்  46 முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று (பிப்ரவரி 23) அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. 

ADVERTISEMENT

இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா,  “

தமிழ்நாட்டில் புதிதாக நிறுவப்பட்ட மற்றும் விரிவாக்கப்பட்ட 46 முதலீட்டு திட்டங்களுக்கு ஊக்க சலுகைகள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ரூ.31,592 கோடி முதலீடு உறுதி அளிக்கப்பட்டதுடன், 61,521 நபர்களுக்கு பயனளிக்க திட்டங்கள் வரையறுக்கப்பட்டுள்ளது.

என்.எம்.பி. மினெபியா நிறுவனம் – செமிகண்டக்டர் (Semiconductor) உற்பத்தி தொடர்பான பல்வேறு செயல்பாடுகள்.

ADVERTISEMENT

ஈல்ட் இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ்- செமிகண்டக்டர் உற்பத்திக்கான சாதனங்கள் தயாரிப்பு.

டிக்சன் குழுமம்- மின்னணு சாதனங்கள் உற்பத்தி.

எஸ்.எஃப்.ஓ டெக்னாலஜிஸ்  – மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி.

விக்ரம் சோலார் – புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின்கலன் சேமிப்பு கட்டமைப்பு (Battery Energy Storage Systems – BESS).

மினெர்வா ஸ்பெஷல் பர்பஸ் வெஹிக்கிள் –  கவச வாகனங்கள் (Armored Vehicles) உற்பத்தி.

ஹிகோகி பவர் டூல்ஸ்-  மின்னாற்றல் கருவிகள் உற்பத்தி.

ஃபெஸ்டோ – தொழில்துறை தானியங்கி (Industrial Automation) சாதனங்கள் உற்பத்தி.

ஏகஸ் குழுமம்- விமான இயந்திரம்  மற்றும் கியர்பாக்ஸ் உதிரிபாகங்கள் தயாரிப்பு.

ஷ்னைடர் எலக்ட்ரிக் – குளிரூட்டப்பட்ட சாதனங்கள் உள்ளிட்ட மின் சாதனங்கள் உற்பத்தி.

பாரத் பயோடெக்-  உயிர் அறிவியல்  பூங்கா அமைத்தல்.

கேட்டர்பிள்ளர் இன்க் – கட்டுமான இயந்திரங்கள் மற்றும் சாதனங்கள் உற்பத்தி.

போயிங் –  மேம்பட்ட வான்வெளி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம்   மற்றும் புதிய முதலீடுகள்.

செயின்ட் கோபைன்-  கண்ணாடித் தயாரிப்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடுகளுக்கு இந்த அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share