சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெறுவதால் சில ரயில் சேவைகள் தாம்பரத்துடன் நிறுத்தப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. Tambaram to Replace Chennai Egmore
மாற்றம் செய்யப்பட்டுள்ள ரயில் சேவைகள்:
சென்னை எழும்பூர்- மதுரை தேஜஸ் (22671, 22672) எக்ஸ்பிரஸ் ரயில், ஜூன் 20-ந் தேதி முதல் ஆகஸ்ட் 18-ந் தேதி வரை தாம்பரத்தில் இருந்து காலை 6.22 மணிக்கு புறப்படும்.
மறுமார்க்கமாக மதுரையில் இருந்து சென்னை தாம்பரத்துக்கு இரவு 9.22 மணிக்கு தேஜஸ் ரயில் வந்தடையும்.
சென்னை எழும்பூர்- மன்னார்குடி எக்ஸ்பிரஸ் (16179, 16180) ரயில் ஜூன் 20-ந் தேதி முதல் ஆகஸ்ட் 18-ந் தேதி வரை தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 11.22 மணிக்கு புறப்படும்.
மறுமார்க்கமாக இந்த ரயில் தாம்பரத்துக்கு அதிகாலை 5 மணிக்கு வந்தடையும்.
சென்னை எழும்பூர்- திருச்செந்தூர் இடையேயான செந்தூர் எக்ஸ்பிரஸ் (20605, 20606) ஜூன் 20-ந் தேதி முதல் ஆகஸ்ட்18-ந் தேதி வரை தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 4.27 மணிக்கு புறப்படும்.
மறுமார்க்கமாக செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில், தாம்பரம் ரயில் நிலையத்தை காலை 10 மணிக்கு வந்தடையும்.
சென்னை எழும்பூர்- குருவாயூர் இடையேயான குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் (16127,16128) ஜூன் 20-ந் தேதி முதல் ஆகஸ்ட் 19-ந் தேதி வரை தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து காலை 10.47 மணிக்குப் புறப்படும்.
மறுமார்க்கமாக குருவாயூரில் இருந்து புறப்படும் இந்த எக்ஸ்பிரஸ் ரயில் தாம்பரத்தை இரவு 7.45 மணிக்கு வந்து சேரும்.
சென்னை எழும்பூர் – கொல்லம் இடையேயான கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் (16101,16102) ஜூன் 20-ந் தேதி முதல் ஆகஸ்ட்18-ந் தேதி வரை தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 5.27 மணிக்கு புறப்படும்
மறுமார்க்கமாக, கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில். தாம்பரத்துக்கு அதிகாலை 2.45 மணிக்கு வந்து சேரும்.
சென்னை தாம்பரம் – ஹைதராபாத் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் (12759, 12760), ஜூன் 20-ந் தேதி முதல் ஆகஸ்ட்18-ந் தேதி வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.