நீட் முடிவு வெளியானது : பார்ப்பது எப்படி?

Published On:

| By Kavi

neet exam result

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவு வெளியாகியுள்ளது. neet exam result

மே 4, 2025 அன்று ஒரே ஷிப்டில் இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட நகரங்களில் 5,453 மையங்களில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்வு நடைபெற்றது. 22 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பதாரர்கள் தேர்வை எழுதினர்.

இந்த தேர்வின் போது மத்திய பிரதேசத்திலும், தமிழகத்திலும் ஒரு சில இடங்களில் மின்சாரம் கட் ஆனதால் மாணவர்கள் தேர்வெழுத சிரமப்பட்டனர்.

எனவே, தேர்வு முடிவுக்கு தடை கேட்டு மாணவர்கள் நீதிமன்றம் சென்றனர். முதலில் நீட் முடிவுக்கு இடைக்கால தடை விதித்த சென்னை உயர் நீதிமன்றம், பின்னர் மத்திய அரசின் வாதத்தை ஏற்று தடையை நீக்கியது.

அதைத்தொடர்ந்து இன்று (ஜூன் 14) நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

 neet.nta.nic.in என்ற இணையதளம் வாயிலாக நீட் தேர்வு எழுதியவர்கள் முடிவை தெரிந்துகொள்ளலாம்.

மாணவர்கள் தங்களது விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல்லை உள்ளீடு செய்து சமர்ப்பித்தால், தங்களது தேர்வு முடிவுகளை பிடிஎப் வடிவில்  பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.neet exam result

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share