ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ‘கங்குவா’ படத்தின் டீசர் இன்று (மார்ச் 19) மாலை 6 மணிக்கு வெளியாகிறது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்டோரின் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் படம் ‘கங்குவா.
Heatwave: வெயில் இங்கதான் ‘அதிகமா’ கொளுத்துதாம்!
10 மொழிகள், மிகப்பெரிய பட்ஜெட் என சூர்யாவின் கேரியரில் அதிக பொருட்செலவில் உருவாகியிருக்கும் படமாக ‘கங்குவா’ திகழ்கிறது. ரசிகர்கள் இப்படத்தினை திரையரங்குகளில் 3டி முறையில் கண்டு களிக்கும் வகையில் படம் உருவாகியுள்ளது.
தற்போது இப்படத்தின் டப்பிங் மற்றும் விஎப்எக்ஸ் பணிகள் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் இன்று மாலை மும்பையில் ‘கங்குவா’ படத்தின் டீசர் வெளியாகிறது.
ஓடிடி உரிமையை கைப்பற்றி இருக்கும் அமேசான் பிரைம் நிறுவனம் ‘கங்குவா’ படத்தின் டீசரை உச்ச நட்சத்திரங்கள் மற்றும் செய்தியாளர்கள் முன்னிலையில், மிகப்பிரமாண்டமாக வெளியிடுகிறது.
Manjummel Boys: செய்த சம்பவம்… புதிய வரலாறு படைத்தது!
இந்த விழாவில் நடிகர்கள் விஜய் தேவரகொண்டா, கார்த்தி மற்றும் படத்தின் நாயகன் சூர்யா, நடிகை சமந்தா உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் கலந்து கொள்கின்றனர். பான் இந்தியா படமென்பதால் டீசர் வெளியீட்டினையே திருவிழா போல நடத்துகின்றனர்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு சூர்யாவின் நடிப்பில் வெளியாகும் படம் என்பதால், ‘கங்குவா’விற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. அந்த எதிர்பார்ப்பினை ‘கங்குவா’ டீசர் தக்கவைத்திடுமா? என்பதை காத்திருந்து பார்க்கலாம்.
-மாணவ நிருபர் கவின்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
IPL 2024: எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்… நம்பிக்கை அளிக்கும் CSK வீரர்!