erode tamil nadu imd

Heatwave: வெயில் இங்கதான் ‘அதிகமா’ கொளுத்துதாம்!

தமிழ்நாட்டில் அதிகம் வெயில் அடிக்கும் இடம் குறித்து வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இன்று (மார்ச் 19) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவக்கூடும்.

இன்று தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 37-39 டிகிரி செல்சியஸை ஒட்டியும், இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது தமிழகத்தின் உள்பகுதிகளில் வசிப்போருக்கு அசௌகரியங்கள் ஏற்படலாம்.

IPL 2024: எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்… நம்பிக்கை அளிக்கும் CSK வீரர்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் மழை எதுவும் பதிவாகவில்லை. மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவுமில்லை”, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகம் பதிவாகியுள்ள இடம் குறித்தும் வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டம் 38.2 டிகிரி செல்சியஸ் உடன் முதலிடத்தை பிடித்துள்ளது.

மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

IPL 2024: எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்… நம்பிக்கை அளிக்கும் CSK வீரர்!

பாஜக பக்கம் சாய்ந்த பாமக… எடப்பாடி ரியாக்‌ஷன்!

“இம்முறை 400க்கும் மேல்” : சேலத்தில் தமிழில் பேசிய மோடி

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts