செயற்கை நறுமணப் பொருட்களைத் தவிர்த்து கோடைக்காலத்தில் புத்துணர்ச்சியாக இருக்க இதைப் பின்பற்றுங்கள்… நாள் முழுக்க மணமாகவும் குளிர்ச்சியாக வலம் வருவீர்கள்.
பச்சைப்பயறு, துளசி, மஞ்சள், வேப்பிலை, இவற்றை சிறிது நேரம் வெயிலில் காயவைத்து, பொடித்து வைத்துக் கொண்டு, தேய்த்து குளித்தால் உடல் குளிர்ச்சியாகும்.
குளிக்கும் தண்ணீரில் எலுமிச்சம்பழச்சாறு கலந்து குளித்தால், கோடைக்காலத்தில் ஏற்படும் வியர்வை வாடை நீங்கும். உடல் புத்துணர்ச்சியாகவும் இருக்கும்.
வெதுவெதுப்பான வெந்நீரில் இரண்டு ஸ்பூன் சீயக்காய்த்தூள், வெந்தயத்தூள் கலந்து குழைத்து, இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தலைக்கு தேய்த்து குளித்தால் வியர்வை வாடை வராது.
குளித்துவிட்டு வந்ததும், நன்கு துடைத்துக்கொண்டு மருதாணி எண்ணெய் தடவி வந்தால் கோடையில் ஏற்படும் அரிப்பு இருக்காது.
வெயில் காலத்தில் சோப்பு தேய்த்துக் கொள்வதை தவிர்த்து விட்டு, பயத்தமாவு, கடலை மாவு தேய்த்து குளிப்பது நல்லது.
ரோஜா, ஆவாரம்பூ, மகிழம்பூ, மரிக்கொழுந்து, செண்பகப்பூ ஆகியவற்றை நிழலில் உலர்த்தி, பொடித்து, குளிக்கும்போது தேய்த்துக் கொண்டால், தோல் ஒவ்வாமை ஏற்படாது. நறுமணம் வீசும்.
கோடைக்காலத்தில் தினமும் இருமுறை குளித்தால், சுறுசுறுப்பாக இருக்கும். உடலும் சுத்தமாக இருக்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராஜஸ்தான் அபார வெற்றி… ஆதிக்கம் செலுத்தும் சொந்த மண் அணிகள்!
சென்னை : தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து மூவர் பலி!
“ED ஆம்ஆத்மியை முடக்க நினைக்கிறது ” : நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் வாதம்!
