’இதாங்க அமித் ஷாக்கு ஸ்கிரிப்ட்’ : அப்டேட் குமாரு

டிரெண்டிங்

தேர்தல் நெருங்க நெருங்க பிரதமர் மோடியோட தமிழக வருகை அதிகமாவே இருக்கும்… அதுல தமிழும் அதிகமாவே இருக்கும். கடைசியா வந்தப்ப திருக்குறள் எழுதுன திருவள்ளுவரே குழம்பி போகுற அளவுக்கு ரெண்டு குறள வாசிச்சி கூட்டத்த அலற விட்டாரு…

அடுத்த மாசம் அமித் ஷா வர்றாராம்… அதனால  இதுவரை நா தழுதழுக்க பேசுன திருக்குறள தாண்டி, நாலடியார், சிலப்பதிகாரத்துல இருந்து டயலாக் ரெடி பண்ண தொடங்கிருக்காங்களாம் இந்த பாஜக டீம்.

ரைட்டு அடுத்த பர்னிச்சர் ஒடைக்க ரெடி ஆயிட்டாங்க போல…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

Kirachand
ஏப்ரல் 4-ம் தேதி தமிழ்நாடு வருகிறார் அமித்ஷா…
மோடி, அமித்ஷா, நட்டா வருவார்கள் முன்னே…
நோட்டா வரும் பின்னே!

நெல்லை அண்ணாச்சி
மயிரிழையில் சிக்கிய அண்ணாமலை….
விண்ணப்பம் நிராகரிப்பு ” இல்லை ”

balebalu
ஜெயிச்சதும் மக்களையே மறந்துடுவாங்க இதுல
வேட்பு மனு எடுத்து வர மறக்குறதும் , சின்னத்தை தவறுதலா பிரச்சாரம் பண்ணுறதும் பெரிய விஷயமா… போவியா

ச ப் பா ணி
அதிமுகவோடு கூட்டணி வைப்பவர்களை வளர்த்துவிடுவோம்! – சிவகாசியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
Ops: என்னாது
EPs: இங்க பேசிக்கிட்டு இருக்கேன்பா

balebalu
தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்-
ராஜ்ய சபா என்னும் ஈஸி வழி இருக்கும்போது எதுக்கு
டேபிளை திருப்பி பார்னிச்சரை உடைச்சுக்கிட்டு

ச ப் பா ணி
ஆபிஸ் மீட்டிங்கில் ரொம்ப யோசிப்பது என்னன்னா.. எப்படி இந்த பிஸ்கட்டை சத்தம் வராம சாப்பிடுறதுன்னு தான்

கோழியின் கிறுக்கல்!
வாழ்க்கையில் யார் கூடவும் ரொம்ப Close ஆக கூடாது,
இல்லைனா, அவங்க நம்மை Close பண்ணிடுவாங்க!!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

லாக் ஆஃப்

முதல் பாதியில் அதிர்ச்சி… இரண்டாம் பாதியில் அதிரடி : டெல்லியை பந்தாடிய பராக்!

ஆளுநர் நடுநிலையாக செயல்பட வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

+1
0
+1
5
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *