The enforcement department wants to block the Aam Aadmi Party! - Aravind Kejriwal

“ED ஆம்ஆத்மியை முடக்க நினைக்கிறது ” : நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் வாதம்!

இந்தியா

ஆம் ஆத்மி கட்சியை அமலாக்கத்துறை முடக்க நினைப்பதாக அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (மார்ச் 28) தெரிவித்துள்ளார்.

மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, அவருக்கு மார்ச் 22 முதல் 7 நாட்கள் அமலாக்கத்துறை காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  அந்த காவல் இன்றுடன் முடிவடைகிறது.

இந்நிலையில், கோவா தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி லஞ்சப் பணத்தை பயன்படுத்தியதற்கான ஆதாரம் இருப்பதாக அமலாக்கத்துறை, டெல்லி ரோஸ் அவின்யூ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் காவலை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்கக்கோரி அமலாக்கத்துறை கோரியுள்ளது.

ஆதாரம் எங்களிடம் உள்ளது! – ED

இதுக்குறித்து அமலாக்கத்துறை சார்பில் நீதிமன்றத்தில், “அரவிந்த் கெஜ்ரிவால் லஞ்சம் பெற்றதற்கான வலுவான ஆதாரம் எங்களிடம் உள்ளது.

கோவா தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி லஞ்சப் பணத்தைப் பயன்படுத்தியதற்கான ஆதாரம் ஆவணங்களில் உள்ளது.

ஆதாரம் தொடர்பான வாதங்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.

கோவா தேர்தலில் லஞ்ச பணம் ஹவாலா வழியில் பயன்படுத்தப்பட்டது” எனத் தெரிவித்துள்ளனர்.

அமலாக்கத்துறைக்கு 2 நோக்கங்கள் தான்!

இதனைத் தொடர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தானே நீதிமன்றத்தில் வாதாடிய போது, “ ரூ.100 கோடி ஊழல் நடத்திருப்பதாக அமலாக்கத்துறையினர் சொல்கிறார்கள், அப்படியானால் அந்த ஊழலின் பணம் எங்கே போனது?

உண்மை என்னவென்றால், அமலாக்கத்துறையின் விசாரணைக்கு பிறகுதான் இந்த ஊழல் தொடங்கியுள்ளது.

அமலாக்கத்துறை எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் என்னை காவலில் வைத்துக்கொள்ளட்டும்.

அமலாக்கத்துறைக்கு 2 நோக்கங்கள் தான் உள்ளன. ஒன்று எங்கள் ஆம் ஆத்மி கட்சியை முடக்குவது, மற்றொன்று மிரட்டி பணம் வசூலிப்பது.

இதற்கு முன்பு,  இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டு இருந்த ஐதராபாத்தின் தொழிலதிபர் சரத் ரெட்டி அடுத்த 5 நாட்களில் வெளியே வந்தார்.

வந்த பிறகு ரூ.55 கோடியை பாரதிய ஜனதா கட்சிக்கு நன்கொடை அளித்தார். இந்த மோசடி நடந்ததற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது.

மதுபான கொள்கை முறைகேடு அல்லது ரூ.100 கோடி பணமோசடி வழக்கின் 6 அறிக்கைகளில் என் பெயர் இடம்பெறவில்லை. ஆனால், 7வது அறிக்கையில் எனது பெயர் குறிப்பிடப்பட்டது.

நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க ஆயிரக்கணக்கான காரணங்கள் அமலாக்கத்துறையிடம் உள்ளது.

ஆனால், அறிக்கையின் அடிப்படையில் எந்த விசாரணையும் இன்றி ஒரு முதலமைச்சரான என்னை கைது செய்துள்ளனர்.

2022 ஆகஸ்ட் 22 அன்று அமலாக்கத்துறை ECIR பதிவு செய்தது, நான் கைது செய்யப்பட்டேன், ஆனால் எந்த நீதிமன்றமும் என்னை குற்றவாளி என்று அறிவிக்கவில்லை.

அமலாக்கத்துறை இதுவரை 31 ஆயிரம் ஆவணங்களைச் சேகரித்துள்ளது, எனது பெயர் நான்கு அறிக்கைகளில் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ரூ.100 கோடி பணமோசடி வழக்கு 2 ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஆகஸ்ட் 17 அன்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

என் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை, என் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. ஆனால் நான் கைது செய்யப்பட்டுள்ளேன்.

டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவின் செயலாளராக இருந்த சி.அரவிந்த், மணீஷ் சிசோடியா என்னிடம் சில கோப்புகளை கொடுத்ததாக கூறினார்.

பல அமைச்சர்கள் எனது வீட்டிற்கு வந்து ஆவணங்களைத் தருகிறார்கள்.

பதவியில் இருக்கும் முதல்வரைக் கைது செய்ய இது போதுமா?” என அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பினார்.

இதனைத் தொடர்ந்து, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின், அரவிந்த் கெஜ்ரிவாலை, ஏப்ரல் 1ஆம் தேதி வரை மேலும் 5 நாட்கள் அமலாக்கத்துறை காவல் வைக்க டெல்லி ரோஸ் அவின்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வேட்பு மனு ஏற்பு… தீவிர வாக்கு சேகரிப்பில் இறங்கிய கலாநிதி வீராசாமி

தாய்மாமன் போட்ட விதை… வைகோ வளர்த்த விருட்சம்! யார் இந்த கணேசமூர்த்தி?

“ஃபேமிலி ஸ்டார்” டிரைலர் எப்படி..?

செல்வ கணபதி, டிடிவி தினகரன் வேட்புமனுக்கள் கடைசி நேரத்தில் ஏற்பு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *