கோவா: தெரு நாயால் தரையிறங்காமல் திரும்பிச் சென்ற விமானம்!

By Minnambalam

|

Published on 15 Nov 2023, 7:31 AM

கோவா – தபோலிம் விமான நிலைய ரன்வேயில் நுழைந்த ஒரு தெரு நாயால்  விஸ்தாரா விமானம் தரையிறங்காமல் பெங்களூருக்குத் திரும்பிச் சென்றுள்ளது.

பெங்களூரில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கோவாவில் உள்ள தபோலிம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு நேற்று மதியம் 12.55 மணிக்கு  விஸ்தாரா விமானம் புறப்பட்டு வந்தது. கோவாவில் உள்ள இந்த விமான நிலையம் கடற்படையின் ஐஎன்எஸ் ஹன்சா தளத்தின் ஒரு பகுதியாகும்.

ADVERTISEMENT

கோவா – தபோலிம் விமான நிலையத்தை நெருங்கிய விஸ்தாரா விமானம், தரையிறங்கும் நேரத்தில் ஒரு தெரு நாய் ஓடுபாதையில் (ரன்வே) நிற்பதை பார்த்த விமான நிலைய அதிகாரி,  கட்டுப்பாடு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்படி, விமானியை தொடர்பு கொண்டு விமானத்தை சற்று நேரம் தரையிறக்காமல் காத்திருக்கும்படி அறிவுறுத்தப்பட்டது.

ஆனால், விமானியோ, பெங்களூருவுக்கே விமானத்தைத் திருப்பினார்.  அதன்படி, விஸ்தாரா விமானம் பெங்களூருக்கு சென்றது. மீண்டும் பெங்களூரில் இருந்து மாலை 4.55 மணிக்கு புறப்பட்ட விமானம் மாலை 6.15 மணிக்கு கோவாவுக்கு வந்தடைந்தது.

ADVERTISEMENT

இதுபற்றி பேசியுள்ள விமான நிலைய இயக்குநர் எஸ்விடி தனம் ஜெயராவ், “ஓடுபாதையில் தெரு நாய் நுழையும் நிகழ்வு எப்போதாவது நடைபெறும். ஆனால், உடனடியாக அப்புறப்படுத்தப்படும். இது போன்ற சம்பவம் நடப்பது, கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இதுவே முதல் முறை” என்று விளக்கமளித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ADVERTISEMENT

ராஜ்

பயிர் காப்பீட்டு காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

ஹெல்த் அண்ட் பியூட்டி: தலைக்கு எண்ணெய் வைப்பதைத் தவிர்ப்பது சரியா, தவறா?

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

INDVsNZ: மீண்டும் ஒரு வாழ்வா? சாவா? போராட்டம்: வான்கடே மைதானம் யாருக்கு சாதகம்?

 

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Minnambalam

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel