திமுக- காங். பேச்சுவார்த்தை: ஸ்டாலினை சந்திக்க புறப்படும் முன் சோனியாவிடம் பேசிய ப.சிதம்பரம்

Published On:

| By Mathi

Chidambaram Sonia Talks

முதல்வர் ஸ்டாலினை சந்திக்கப் புறப்படுவதற்கு முன்னர் மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம், சோனியா காந்தியுடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.

திமுக- காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்ட நிலையில் முதல்வர் ஸ்டாலினை சந்திக்குமாறு ப.சிதம்பரத்திடம் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டார். இதனை நமது மின்னம்பலத்தில் முதன் முதலில் பதிவு செய்திருந்தோம்.

ADVERTISEMENT

இதனையடுத்து சென்னையில் ப.சிதம்பரத்தை தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை சந்தித்து பேசினார். அப்போது செல்வபெருந்தகையிடம், திமுகவுடனான பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் எத்தனை தொகுதிகள் கேட்டது? திமுக கொடுக்க முன்வந்த தொகுதிகள் எத்தனை? என்பது உள்ளிட விவரங்களை முழுமையாக கேட்டுக் கொண்டார் ப.சிதம்பரம்.

இதனையடுத்து முதல்வர் ஸ்டாலினை சந்திக்க புறப்படும் முன்னர், சோனியா காந்தியுடன் சிதம்பரம் போனில் ஆலோசனை நடத்தினார்.

ADVERTISEMENT

முன்னதாக, முதல்வர் ஸ்டாலின் அலுவலகத்தை தொடர்பு கொண்டு, சிதம்பரம் சந்திக்க வரும் தகவலையும் தெரிவித்திருந்தார் செல்வப்பெருந்தகை. தற்போது சிதம்பரம் காரில் இருவரும் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க செல்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share