கோடை விடுமுறை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என இன்று (ஏப்ரல் 22) பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்து மாணவர்கள் கோடை விடுமுறையில் உள்ளனர்.
தேர்வுகள் முடிந்த பிறகு சில பள்ளிகளில் மாணவர்களுக்கு கோடை விடுமுறைகளில் வகுப்புகள் நடத்தப்படுவது வழக்கம்.
இதனைத் எதிர்த்து, முதல்வரின் தனிப்பிரிவில் மனு ஒன்று போடப்பட்டிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறை சார்பில் இன்று (ஏப்ரல் 22) அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.
அதில், “கோடை விடுமுறை மற்றும் பொது விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
மாணவர்களின் மனதில் ஏற்படும் அழுத்தத்தை குறைக்கவே கோடை விடுமுறைகள் விடப்படுவதால் கோடை விடுமுறையில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தக்கூடாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
புதிய பிசினஸ் ஆரம்பித்த ‘அயலி’ நடிகை… வாழ்த்தும் ரசிகர்கள்…!
அதிகரிக்கும் வெப்பம்… தள்ளிப்போகிறதா தேர்தல்? – ஆலோசனையில் தேர்தல் ஆணையம்!
Comments are closed.