முத்துக்குமார் இயக்கத்தில் ஜீ தமிழில் வெளியான ‘அயலி’ வெப் சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் அட்டகாசமான வரவேற்பைப் பெற்றது. 8 எபிசோடுகளாக வெளியான இந்தத் தொடர் ரசிகர்களிடம் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தியது.
மூடநம்பிக்கையில் மூழ்கிக் கிடக்கும் ஒரு கிராமத்தின் கதை தான் அயலி. வயதுக்கு வந்த பெண்கள் படிக்கக் கூடாது, உடனே திருமணம் செய்ய வேண்டும் என்பதுதான் அந்த கிராமத்தின் வழக்கம்.
படித்து டாக்டராக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் ஹீரோயின் எவ்வாறு தடைகளை மீறி படிக்கிறார் என்பதுதான் கதை. வெளியாகி தொடர்ந்து இரண்டு வாரங்கள் டிரெண்டிங்கில் இருந்தது இந்த வெப்சீரிஸ். இதனை ஜி நிறுவனம் திரைப்படமாகவும் வெளியிட்டுள்ளது.
அயலி தொடரில் அபி நட்சத்திரா, அனுமோல், சிங்கம் புலி, அருவி மதன், லிங்கா போன்ற பலர் நடித்திருந்தனர். இந்த தொடரின் வெற்றிக்கு காரணமே சிறப்பான நடிக, நடிகையர் தேர்வு தான். முக்கியமாக ஹீரோயினாக நடித்த அபி நட்சத்திர சிறப்பாக நடித்து இருந்தார்.
இதற்கு முன்பு அவர் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்திலும் தோன்றினார். இந்தநிலையில் அபி நட்சத்திரா தற்பொழுது புதிய பிசினஸ் ஒன்றை ஆரம்பித்துள்ளார். துணிக்கடை ஒன்றைத் துவங்கி இருக்கும் அவர், அந்த கடைக்கு ‘அயலி பொட்டிக்’ என்று பெயர் வைத்துள்ளார்.
இதுதொடர்பான வீடியோவை அபி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த சின்ன வயதிலேயே புது பிசினஸை ஆரம்பித்திருக்கும் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
–பிரியங்கா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அதிகரிக்கும் வெப்பம்… தள்ளிப்போகிறதா தேர்தல்? – தேர்தல் ஆணையம் ஆலோசனை!
ஹீரோவாக அறிமுகமாகும் சீரியல் நடிகர்… ஹீரோயின் யார் தெரியுமா…?!
தனியார் பள்ளிகளில் இலவச கல்வி: விண்ணப்பிப்பது எப்படி?