செங்கோட்டையனின் டெல்லி பயணம் குறித்த கேள்விக்கு என்னை மட்டும் தனிப்பட்ட முறையில் நீங்கள் ஏன் செல்கிறீர்கள் என கேட்க கூடாது என தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் மூத்த அமைச்சர் செங்கோட்டையன் இன்று (செப்டம்பர் 5) காலை செய்தியாளர்களை சந்தித்து அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இது அதிமுக நிர்வாகிகளிடையே கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர்கள் சந்திப்பின் போது, கடந்த காலங்களில் அதிமுக தலைமையின் அனுமதி இல்லாமல் டெல்லி சென்று பல்வேறு பாஜக தலைவர்களை சந்தித்து இருக்கிறீர்கள். இதற்கு முன் அம்மையார் ஜெயலலிதா, எம்ஜிஆர் தலைமையில் இருந்தபோது முன்னாள் அமைச்சர்கள் இப்படி யாராவது சந்திக்க முடியா? இதில் உள்நோக்கம் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு நம்முடைய அமைச்சரவையிலிருந்து பாரத பிரதமரையே சந்தித்து பேசியவர்கள் இருக்கிறார்கள். உள்துறை அமைச்சரையும் சந்தித்து பேசியவர்கள் இருக்கிறார்கள். என்னை மட்டும் தனிப்பட்ட முறையில் நீங்கள் ஏன் செல்கிறீர்கள் என கேட்க கூடாது.
அவர்கள் அழைக்கிறார்கள்.. போகிறோம். போனதற்கு பிறகு சுமூகமான உறவு ஏற்படுகிறது. இன்று இணைந்து பணியாற்றுகிறார்கள்” என்றார்.
எந்த தியாகத்தையும் செய்ய தயார்!
நீங்கள் அடுத்த பொதுச் செயலாளராக ஆவதற்கு முயற்சி செய்வீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, ”என்னை பொறுத்தவரை இந்த இயக்கத்திற்காக எந்த வித தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன். இந்த இயக்கம் உயிரோட்டம் உள்ள இயக்கமாக இருக்க வேண்டும். நூறு ஆண்டு காலம் ஆளும் என்று புரட்சி தலைவி அம்மா குறிப்பிட்டதை நிறைவேற்றுவதற்காகவே இன்று எனது பணிகளை துவங்கி இருக்கிறேன்” என்றார்.