அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை 10 நாட்களில் ஒருங்கிணைக்க முயற்சிகளை எடுக்க வேண்டும்; அப்படி ஒருங்கிணைக்காவிட்டால் நாங்களே ஒருங்கிணைக்கும் நடவடிக்கையை மேற்கொள்வோம் என அக்கட்சியின் அதிருப்தித் தலைவர் கே.ஏ. செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோபிச்செட்டிபாளையத்தில் இன்று (செப்டம்பர் 5-ந் தேதி) செய்தியாளர்களை சந்தித்த கே.ஏ.செங்கோட்டையன் கூறியதாவது:
அதிமுக ஒன்றுபட்டிருந்தால்தான் தேர்தலில் வெல்ல முடியும். அதனால் 6 முன்னாள் அமைச்சர்கள், அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என பொதுச்செயலாளரிடம் (எடப்பாடி பழனிசாமி பெயரை சொல்லவில்லை) தெரிவித்தோம். அவர் அதை ஏற்கவில்லை.
அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்கள் முக்கிய பொறுப்பில் இருந்தவர்கள். அவர்களை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும். அவர்கள் அதிமுகவில் நிபந்தனையின்றி இணைந்து செயல்பட தயாராக இருக்கின்றனர்.
அப்படி அதிமுகவில் அவர்களை குறுகிய கால கட்டத்தில் சேர்க்காவிட்டால், அதிமுகவில் இருந்து வெளியேறியவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்ற மனநிலையில் இருப்பவர்கள் ஒருங்கிணைந்து அத்தகைய நடவடிக்கையை மேற்கொள்வோம்.
10 நாட்களுக்குள்- உரிய காலக்கெடுவுக்குள் அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை இணைக்க முயற்சிக்க வேண்டும். தொண்டர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அவர்களை இணைக்க வேண்டும். இவ்வாறு செங்கோட்டையன் தெரிவித்தார்.
செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பு:
