மூக்குத்திக்குள் பிட்? – நீட் தேர்வுக்கு எதிராக கொந்தளித்த சீமான்

Published On:

| By Selvam

நீட் தேர்வு என்பது பல ஆண்டுகளாக கல்வி மறுக்கப்பட்ட சமூகங்களுக்கு எதிரானதாகும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (மே 5) தெரிவித்துள்ளார். seeman asks more questions regarding

சென்னையை அடுத்த தாம்பரத்தில் அயோத்திதாசர் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

ADVERTISEMENT

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம், நீட் தேர்வில் மாணவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த சீமான், “மாநில சுயாட்சி நாயகர் என்று விழா எடுத்த முதல்வர் ஸ்டாலின் இதற்காக வெட்கப்பட வேண்டும். நீட் தேர்வில் நாங்கள் பல கேள்விகளை எழுப்புகிறோம். அதற்கு யாரிடமும் பதில் இல்லை. நீட் தேர்வு தரமான மாணவர்களை உருவாக்கும் என்பதற்கு எப்படி உறுதி தருகிறீர்கள்?

ADVERTISEMENT

நீட் தேர்வுக்காக நடத்தப்படும் கோச்சிங் சென்டர்கள் மூலம் பல ஆயிரம் கோடி சம்பாதிக்கிறார்கள். நீட் தேர்வு என்பது பல ஆண்டுகளாக கல்வி மறுக்கப்பட்ட சமூகங்களுக்கு எதிரானதாகும்.

அனிதா மறைவுக்கு பிறகு நீட் தேர்வுக்கு எதிராக வெடித்த போராட்டங்களின் விளைவாக தான் நீட் தேர்வை ஒழிப்போம் என்று திமுக சொன்னார்கள். நீட் தேர்வுக்கு எதிராக 60 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கினோம் என்றீர்கள். தற்போது அதனை என்ன செய்தீர்கள்?

ADVERTISEMENT

இந்தியா முழுவதும் மாணவர்கள் நீட் தேர்வை எழுதுகிறார்கள். ஆனால், தமிழகத்தில் மட்டும் ஏன் இந்தக் கொடுமை நடக்கிறது. மாணவர்கள் அணியும் உள்ளாடையை எந்த மாநிலத்தில் அகற்றுகிறார்கள்? மாணவர்களின் உள்ளாடையை அகற்ற நீங்கள் யார்?

மூக்குத்திக்குள் பிட் எடுத்துச் சென்று தேர்வு எழுத முடியுமா? தேர்வு எழுதும் அறையில் கண்காணிப்பாளர் இதையெல்லாம் கவனிக்கமாட்டாரா?

மூக்குத்தி, சட்டை பொத்தான், தாலிக்குள் பிட் எடுத்துச்சென்று தேர்வு எழுத முடியும் என்று நம்பும் நீங்கள், ஈவிஎம் மிஷின்களில் முறைகேடு எதுவும் செய்ய முடியாது என்று சொல்கிறீர்கள். வட இந்தியாவில் நீட் தேர்வு எழுதும்போது முறைகேடு செய்கிறார்கள். தேர்வு கண்காணிப்பாளர் அவர்களுக்கு உதவுகிறார்கள். தமிழகத்தில் மட்டும் ஏன் இந்தக் கொடுமை நடக்கிறது” என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share