கனமழை எதிரொலியாக மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை (நவம்பர் 14) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு பகுதிகளில் கன மழை முதல் மிகக் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வரலாறு காணாத மழை பெய்துள்ளது.
அங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் கடல் போல் சூழ்ந்துள்ள மழை நீரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மீட்புப் பணிகள் மற்றும் மழை நீரை வெளியேற்றும் பணிகள் தீவிரமடைந்துள்ளது. நாளை முதல்வர் மு.க. ஸ்டாலின் சீர்காழியில் ஆய்வு செய்வதற்காக இன்று மாலை சென்னையிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளில் இருந்து வெள்ள நீரை வெளியேற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் மாணவர்களின் நலனைக் கருதி மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவிட்டுள்ளார்.
மோனிஷா
சீர்காழி புறப்பட்டார் ஸ்டாலின்