கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ரெட்ரோ திரைப்படம் இன்று (மே 1) திரையரங்குகளில் வெளியானது. retro santhosh narayanan reply on pooja hegde
தமிழகத்தில் இப்படத்தின் முதல் காட்சிகள் காலை 9 மணிக்கு திரையிடப்பட்டன. இந்த நிலையில் சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் ரசிகர்களுடன் சேர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட படக்குழுவினர் கண்டு ரசித்தனர்.
அதன்பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய கார்த்திக் சுப்புராஜ், “ரெட்ரோ படத்திற்கு ரசிகர்களின் ரெஸ்பான்ஸ் ரொம்ப நல்லா இருந்தது. நாங்கள் எதிர்பார்த்த ஒவ்வொரு இடத்திலும் ரசிகர்கள் அதனை ரசித்து கொண்டாடினர். சந்தோஷ் இசை படத்தின் ஒரு ஹீரோவாக இருக்கிறது. ஒட்டுமொத்தமாக எங்க டீம் எல்லோரும் இப்போது மகிழ்ச்சியாக உணர்கிறோம்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேட்டியளித்த சந்தோஷ் நாராயணனிடம், ’பூஜா ஹெக்டே நடித்தால் படம் ஓடாது என்ற பேச்சு சினிமா வட்டாரத்தில் உள்ளது அதை எப்படி பார்க்கிறீங்க?’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், “அதெல்லாம் வெறும் மூடநம்பிக்கை தான். அப்படியெல்லாம் இல்லை. நல்ல படமாக இருந்தால் அது நிச்சயம் ஓடும்.
சூர்யாவுடன் பணிபுரிய வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. அதற்கு வாய்ப்பளித்த கார்த்திக் மற்றும் 2டி நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படம் நன்றாக இருந்தது. இது எல்லா ரசிகர்களையும் கவரும். மியூசிக் மட்டுமே ஒரு படத்தை ஜெயிக்க வைக்க முடியாது. கதைக்கு ஏற்றவாறு இசையமைத்து நாங்கள் நல்ல பெயர் வாங்குகிறோம், அவ்வளவு தான்” என அவர் தெரிவித்தார்.