சென்னையில் வரும் ஆகஸ்ட் 18-ஆம் தேதி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிடுகிறார்.
கலைஞர் பெயரில் ரூ.100 மதிப்பில் நினைவு நாணயம் வெளியிட மத்திய நிதியமைச்சகத்திடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த நாணயத்தை கலைஞரின் 100-வது பிறந்த நாளான கடந்த ஜூன் 3-ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால், நாணயத்திற்கான நடைமுறைகள் நிறைவடையாத காரணத்தினால், குறிப்பிட்ட தேதியில் வெளியிட முடியவில்லை.
இந்தநிலையில், நாணயத்திற்கான அனைத்து நடைமுறைகளும் நிறைவடைந்து நினைவு நாணயத்திற்கான அனுமதியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கையெழுத்திட்டார். இதனை தொடர்ந்து மத்திய அரசின் கெஜட்டிலும் நாணயம் அச்சடிக்க உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், கலைஞர் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழா முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆகஸ்ட் 18-ஆம் தேதி மாலை 6.50 மணிக்கு நடைபெறுகிறது.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலைஞர் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார். இந்த நிகழ்ச்சியில் திமுக மூத்த அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நெட்பிளிக்ஸில் மஜா காட்டும் ‘மகாராஜா’
பிரதமரை கொஞ்சி தேசத்தின் டார்லிங்கான நயிஷா… நிலச்சரிவில் தந்தை, சகோதரிகளை இழந்த சிறுமி!