நெட்பிளிக்ஸில் மஜா காட்டும் ‘மகாராஜா’

சினிமா

இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் 50-வது படமாக தயாரிக்கப்பட்ட மகாராஜா திரைப்படம் விஜய் சேதுபதிக்கு வணிக அடிப்படையில் கம்பேக் படமாக அமைந்தது. 2024 ஜூன் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் இதுவரை சுமார் ரூ.109.5 கோடி வசூல் செய்துள்ளதாக வணிக வட்டாரங்கள் கூறுகிறது.

விஜய் சேதுபதி நாயகனாக நடித்த படங்களில் ரூ.100 கோடி மொத்த வசூலை கடந்த முதல் படம் மகாராஜா.

ரூ.100 கோடிக்கும் மேல் வசூலை கடந்தது. இதன் மூலம் நடிகர் விஜய் சேதுபதிக்கு அவரது திரையுலக வாழ்க்கையில் மைல் கல்லாக மகாராஜா திரைப்படம் மாறியுள்ளது.

நான்கு வாரங்கள் முடிந்த நிலையில் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் மகாராஜா வெளியானது. படம் வெளியான நாள் முதல் தொடர்ந்து டிரெண்டிங்கில் உள்ளது என கூறப்பட்டு வந்த நிலையில், 2024 ஜனவரி முதல் ஜூலை வரை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான தமிழ் படங்களில் அதிகம் பார்க்கப்பட்ட முதல் படமாகவும், அதிகம் பார்க்கப்பட்ட இந்திய மொழி படங்களில் மூன்றாவது படமாக மகாராஜா இடம்பிடித்துள்ளது.

வேறு எந்தவொரு தமிழ்படமும் அதிகம் பார்க்கப்பட்ட முதல் பத்து இடங்களுக்கான பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1. க்ரூ-17.9 மில்லியன்

2. லாபாதா லேடீஸ்-17.1 மில்லியன்

3. மகாராஜா-15.5 மில்லியன்

4. ஷைத்தான்-14.8 மில்லியன்

5. பைட்டர்-14மில்லியன்

6. அனிமல்-13.6 மில்லியன்

7. மகாராஜ்-11.6 மில்லியன்

8. டன்கி- 10.8 மில்லியன்

9. பக்சக்-10.4 மில்லியன்

10. படேமியான்சோட்மியான் – 9.6 மில்லியன்

இராமானுஜம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரதமரை கொஞ்சி தேசத்தின் டார்லிங்கான நயிஷா… நிலச்சரிவில் தந்தை, சகோதரிகளை இழந்த சிறுமி!

முதல் நாளே இப்படியா? அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

ஹிண்டன்பர்க் அறிக்கை… அதானி பங்குகள் கடும் சரிவு!

மலையாள படத்தில் பாரதிராஜா… ரசிகர்களுக்கு காத்திருக்கும் சஸ்பென்ஸ்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0